2021 சுசுகி ஹயாபூசா பைக்கிற்கான முன்பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தம்

28 April 2021, 6:08 pm
2021 Suzuki Hayabusa's bookings closed temporarily. Here's why
Quick Share

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹெவிவெயிட் ஸ்போர்ட் டூரர் பைக்கான 2021 ஹயாபூசா அறிமுகமான உடனேயே ரசிகர்களிடம் இருந்து மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா இப்போது தற்காலிகமாக இந்த பைக்கிற்கான முன்பதிவுகளை நிறுத்தியுள்ளது. பைக் அறிமுகப்படுத்தப்பட்ட 2 நாட்களுக்குள் 101 யூனிட்களும் முன்பதிவுச் செய்யப்பட்டு முதல் தொகுதி விற்கப்பட்டதாக நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஹயாபூசா பைக்கின் விநியோகங்கள் விரைவில் தொடங்கும், மேலும் பைக்கின் அடுத்த தொகுதிக்கான விற்பனை 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஹயாபூசா 1,340 சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது இப்போது இந்தியாவில் BS 6 க்கு சமமான யூரோ 5 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணக்கமானதாக உள்ளது. இது 190 HP அதிகபட்ச சக்தி மற்றும் 150 Nm உச்ச திருப்புவிசையை வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 18.5 கி.மீ மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது, சூப்பர் பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 290 கி.மீ. ஆகும்.

2021 ஹயாபூசா மோட்டார் சைக்கிள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டதாக இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிள் புதிய லோகோ வடிவமைப்பு, மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டேங்க், புதிதாக வடிவமைக்கப்பட்ட நீண்ட வெளியேற்றங்கள் போன்ற பல வடிவமைப்பு மேம்படுத்தல்களைப் பெறுகிறது, அவை குரோம் பூச்சு கொண்டவை. ஏழு ஸ்போக் அலாய் வீல்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன.

2021 சுசுகி ஹயாபூசா மூன்று டூயல்-டோன் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அவை கேண்டி பர்ன்ட் கோல்டு நிறத்துடன் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், கேண்டி டேரிங் ரெட் உடன் மெட்டாலிக் மேட் ஸ்வார்டு சில்வர் மற்றும் மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூவுடன் பியர்ல் பிரில்லியன்ட் ஒயிட் ஆகிய இரட்டை தொனி வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

Views: - 111

0

0

Leave a Reply