உங்கள் போனுக்கும் ஜூலை 31 ஆம் தேதிக்கும் ஒரு சம்பந்தம் உண்டு! தெரியுமா உங்களுக்கு?

31 July 2020, 5:27 pm
25 years of Mobility in India: The first mobile phone call was made on this day
Quick Share

இந்தியா 25 ஆண்டுகால மொபிலிட்டியை இன்று கொண்டாடுகிறது. அதாவது ஜூலை 31 ஆம் தேதியான இன்றுதான் இந்தியாவில் முதன்முதலில் மொபைல் அழைப்பு செய்யப்பட்ட நாள் ஆகும். இந்த முதல் நிகழ்வு ஜூலை 31, 1995 அன்று நடந்தது, அப்போதைய மேற்கு வங்க முதல்வர் ஜோதி பாசு மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் சுக் ராமுக்கு முதல் அழைப்பைச் செய்தார்.

இந்தியாவில் முதல் மொபைல் அழைப்பு நோக்கியா கைபேசிகளைப் பயன்படுத்திதான் செய்யப்பட்டது. 

அதற்கு பயன்படுத்தப்பட்ட நெட்வொர்க் மோடி டெல்ஸ்ட்ராவின் மொபைல்நெட் சேவையாகும் (Modi Telstra’s MobileNet service), இது இந்தியாவின் பி.கே மோடி குழுமத்திற்கும் ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ட்ராவிற்கும் இடையிலான கூட்டு நிறுவனமாகும். 

As India celebrates 25 years of mobility, we take a look at the time when the first phone call was made and how things have changed now.

கல்கத்தா (இப்போது கொல்கத்தா) மற்றும் புது தில்லி ஆகிய இரு இடங்களுக்கு இடையில் மொபைல் அழைப்பு நிகழ்ந்தது. இன்னும் குறிப்பாக, இது கல்கத்தாவில் உள்ள ரைட்டர்ஸ் பில்டிங்கிலும், டெல்லியின் சஞ்சார் பவனிலும் நடந்தது.

ஆரம்ப நாட்களில், அழைப்புக்கு நிமிடத்திற்கு ரூ.8.4 செலவாகும் என்று கூறப்படுகிறது, இது உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகள் இரண்டுக்கும் இதே அளவு செலவு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக மொபைல் அழைப்பு போக்குவரத்து உள்ள நேரங்களில், செலவு நிமிடத்திற்கு ரூ.16.8 வரை செல்லுமாம்.

இப்போது நிலைமை முற்றிலும் மாறிவிட்டது மற்றும் இப்போது கிட்டத்தட்ட 448 மில்லியன் மொபைல் பயனர்களுடன் இந்தியா அண்ணாந்து பார்க்கும் உயரத்துக்கு வந்துவிட்டது. மொபைல் பயன்பாட்டாளர்களில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாகும். நாட்டில் “இலவச அழைப்புகள் மற்றும் இணையம்” கலாச்சாரத்தைக் கொண்டுவந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு தான் நாம் இந்த நேரத்தில் மிகப்பெரிய  நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், ரிலையன்ஸ் ஜியோ  உள்ளே வராமல் இருந்திருந்தால்  விலைகள் என்ன வரம்பில் இருந்திருக்கும் என்பது  நமக்கு தெரியாதது ஒன்றுமில்லை.

தொலைதொடர்பு துறையில் ஜியோவின் நுழைந்ததும் கட்டணங்கள் எல்லாம் குறைந்தது, இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள மற்ற டெல்கோக்களும் விரைவாக அதைப் பின்பற்ற தொடங்கின. அப்போதிருந்து அழைப்புகள் (உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி) மற்றும் மொபைல் இணைய சேவை மிகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் சேர்த்து இந்தியர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் அம்ச தொலைபேசிகளும் மிகவும் மலிவு விலையாக மாறிப்போனது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply