ஐபோன் 13 பற்றி வெளியான சுவாரசியமான தகவல் கசிவுகள்! இதெல்லாம் உண்மையா இருந்தா எப்படி இருக்கும்!
Author: Hemalatha Ramkumar13 August 2021, 8:38 am
2021 ஆம் ஆண்டில், பல அற்புதமான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகிவிட்டன, ஆகவும் உள்ளன. ஆனால், எந்தவொரு ஆண்டும் ஐபோன் இல்லாமல் நிறைவடையாது. ஆம், என்னதான் பல அம்சங்களோடு ஆன்ட்ராய்டு போன்கள் வெளியானாலும் ஆப்பிள் நிறுவனம் எப்போது புதிய ஐபோன் மாடலை அறிமுகம் செய்யும், என்னென்ன புது அம்சங்கள் இருக்கும் என்பதை நோக்கியே பல கண்கள் காத்திருக்கும். அதே போல இந்த ஆண்டும் ஐபோன் 13 மாடலை நோக்கிய பலரும் காத்திருக்கின்றனர். இந்த ஐபோன் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரவிருக்கும் ஐபோன் குறித்து வெளியான சில சுவாரசியமான தகவல் கசிவுகளை இப்போது பார்க்கலாம்.
120 Hz ProMotion டிஸ்ப்ளே
இந்த 120 Hz refresh rate என்பது இப்போது ஆண்ட்ராய்டு போன்களில் எல்லாம் பொதுவான ஒன்றாகிவிட்டது. ஃபிளாக்ஷிப் போன்கள் மட்டுமல்லாமல், சாதாரணம் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களிலும் கூட இந்த நாட்களில் அதிக refresh rate கிடைக்கிறது. இருப்பினும், தற்போதைய ஆப்பிள் ஐபோன்கள் எல்லாம் 60 Hz refresh rate மட்டுமே கொண்டுள்ளன. சொல்லப்போனால் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 12 ப்ரோ மேக்ஸில் கூட 60Hz refresh rate தான் இருக்கும். ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின்படி, iPhone 13 Pro தொடரில் 120 Hz refresh rate வழங்க மற்றும் LTPO டிஸ்பிளேவை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துரதிருஷ்டவசமாக, ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி ஆகியவை 60 Hz refresh rate மட்டுமே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
வீடியோ போர்ட்ரைட் மோட் மற்றும் ProRes
சமீபத்தில் வெளியான தகவல் கசிவின்படி, ஐபோன் 13 வரிசையில் வீடியோ போர்ட்ரைட் பயன்முறையைக் கொண்டிருக்கும், இது பயனர்களின் காட்சிகளின் பின்னணியை மங்கச் செய்யும் என்று தெரியவந்துள்ளது.
அடுத்து ProRes எனப்படும் உயர்தர வடிவத்தில் வீடியோவை பதிவு செய்யும் திறனையும் ஆப்பிள் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பயனர்களை உயர்தர வடிவத்தில் வீடியோக்களைப் படம்பிடிக்க அனுமதிக்கும்.
சிறிய நாட்ச்
ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அண்டர் டிஸ்பிளே கேமராக்களுடன் பஞ்ச்-ஹோல் கட்அவுட் வடிவமைப்பிலிருந்து விடுபட முயற்சிக்கும் சமையத்தில், ஐபோன்கள் இன்னும் FaceID நோக்கங்களுக்காக பெரிய நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஐபோன் 13 வரிசையில் ஆப்பிள் நாட்ச் அளவைக் குறைக்கும் என்று வதந்தி பரவியுள்ளது. TrueDepth கேமரா ஆழமற்றதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காட்சியின் மேற்புறத்தில் உள்ள ரிசீவர் கேஸின் விளிம்பிற்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.
விலை மாறாது!
ஐபோன் 13 சீரிஸ் அதன் முந்தைய மாடலான ஐபோன் 12 போலவே விலைக்கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பொருள் அடிப்படை ஐபோன் 13 $799 விலைக்கொண்டிருக்கும் என்றும் தகவல் கசிந்துள்ளது. ஐபோன் 13-ல் பெரிய தொழில்நுட்ப மேம்பாடுகள் இருக்காது என்பதால் இதன் விலை அப்படியே இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஐபோன் 13 ப்ரோவின் விலை $999 இருக்கலாம் என்றும் ஊகிக்கப்பட்டுள்ளது.
ஃபாஸ்ட் சார்ஜ் அம்சம்
ஆண்ட்ராய்டு போன்களை வழங்கும் நிறுவனங்கள் 65W க்கு மேல் சார்ஜ் வேகத்தை வழங்கி வரும் நிலையில், iPhone 12 இன்னமும் 20W சார்ஜிங் ஆதரவை மட்டுமே வழங்குகிறது. வரவிருக்கும் ஐபோன் மூலம் ஆப்பிள் அந்த எண்ணை 25W க்கு உயர்த்தும் என்று வதந்திகள் பரவியுள்ளது. இருப்பினும், பவர் அடாப்டர் தொகுப்பின் ஒரு பகுதியாக இருக்காது.
0
0