தள்ளாடும் வயதிலும் தனது ஆசை மனைவிக்காக சுழலும் வீடு கட்டியுள்ள ஹீரோ!!!

Author: Hemalatha Ramkumar
15 October 2021, 3:26 pm
Quick Share

ஒருவரின் பார்வை மற்றும் அதிர்வுக்கு ஏற்ப சுழலும் ஒரு வீடு? உங்களால் நம்ப முடிகிறதா…? ஆம், உண்மை தான். தனது மனைவியின் பார்வையை பன்முகப்படுத்த, ஒரு போஸ்னிய நபர் சமீபத்தில் ஒரு சுழலும் வீட்டை கட்டியுள்ளார்.

உங்கள் துணைவர் மீதான உங்கள் காதல் ஆழமாக இருக்கலாம். ஆனால் இந்த நண்பர் உண்மையில் நம் அனைவரையும் விட உயர்ந்தவர் என்பதை காட்டி விட்டார். தனக்கு தானே எல்லாவற்றையும் கற்றுக்கொடுத்த 72 வயதான இந்த நபர் தான் தற்போது போஸ்னியாவின் ஹீரோ.

சுழலும் வீட்டின் பின்னால் உள்ள உத்வேகம்:


தங்களது வீடு பற்றிய தனது மனைவியின் புகார்களை அந்த நபர் மிகவும் எளிமையாக சமாளித்துள்ளார். இதனை சமாளிக்க அவர் தனது மனைவிக்கு ஒரு சுழலும் வீட்டை கட்ட முடிவு செய்தார்.

இந்த வீடு வடக்கு போஸ்னியாவில் சர்பாக் என்ற நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இது 7 மீட்டர் நீள அச்சில் சுழல்கிறது. குடும்பத்தினர் தங்கள் விருப்பப்படி வீட்டின் வேகத்தை மாற்றலாம். நாளின் நேரத்தைப் பொறுத்து அவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள பசுமையான வயல்களைப் பார்க்கலாம். கூடுதலாக, அவர்கள் காடுகள் மற்றும் ஆற்றின் காட்சியையும் பார்க்க முடியும்.

மெதுவான வேகத்தில், வீடு 24 மணி நேரத்தில் ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது. அதன் அதிகபட்ச வேகத்தில், சுழலும் வீடு 22 வினாடிகளில் முழு சுழற்சியை முடிக்க முடியும்! இதை நினைத்தாலே நமக்கு தலைச்சுற்றல் வருகிறது அல்லவா…?

கண்டுபிடிப்பாளர்களான நிகோலா டெஸ்லா மற்றும் மிஹாஜ்லோ புபின் ஆகியோரிடமிருந்து தனக்கு உத்வேகம் கிடைத்ததாக குசிக் கூறினார். இந்த விதிவிலக்கான வீடு கட்ட இவருக்கு ஆறு ஆண்டுகள் ஆனது. உண்மையில், குசிக்கின் அர்ப்பணிப்பு என்னவென்றால், அவர் இதயம் தொடர்பான கவலைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ​​சுழலும் வீட்டை முடிக்க குறைந்தபட்சம் ஒரு வருடமாவது அவகாசம் அளிக்குமாறு மருத்துவர்களை அவர் வலியுறுத்தினார். தனது மனைவிக்கான இவரது அன்பு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

Views: - 358

0

0