தீபாவளி வாழ்த்து அனுப்ப ட்விட்டர் உருவாக்கியுள்ள அட்டகாசமான ஒளிரும் ஈமோஜி..!!!

11 November 2020, 9:56 pm
Quick Share

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. ஆனால்  கோவிட் -19 தொற்றுநோயால் இந்த ஆண்டு பெரும்பாலான மக்கள் தங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கலாம். சமூக தூரத்தை பராமரிப்பதில் மக்களுக்கு உதவுவதற்கும், அவர்களை வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கும், ட்விட்டர் இந்தியா புதிய # ஹேப்பி தீபாவளி ஈமோஜியை அறிமுகப்படுத்தியுள்ளது. 

இந்த புதிய #HappyDiwali ஈமோஜிஒரு நீட்டப்பட்ட உள்ளங்கையில் ஒரு விளக்கு  வைக்கப்பட்டுள்ளது போல உள்ளது. பயனர்கள் லைட்ஸ் அவுட் இருண்ட பயன்முறைக்கு மாறும்போது அந்த விளக்கில் உள்ள சுடர் பிரகாசிக்கிறது.  

இந்த புதிய விளக்கு  ஈமோஜியுடன்,  “சிந்தனைமிக்க வார்த்தைகள் மற்றும் செயல்களின் மூலம் ஒரு நேர்மறையான மாற்றத்தை உருவாக்க இந்த ஈமோஜி பயனர்களுக்கு உதவும்.” என நிறுவனம் கூறுகிறது. மேலும்  சமீபத்தில், பலர் ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள். மேலும் உண்மையான, அர்த்தமுள்ள மற்றும் நேர்மறையான உரையாடல்களை இயக்குகிறார்கள். 

இந்த வருடம் நமக்கு கற்றுக்கொடுத்துள்ள பாடம் ‘நான்’ என்ற வார்த்தையில் இருந்து ‘நாம்’ என்ற வார்த்தைக்கு நம்மை கொண்டு சென்றுள்ளது.  இந்த தீபாவளி,  கொண்டாட்டத்தின் மூலமாக மக்களை ஒன்று சேர்க்கும்போது, ட்விட்டரின் இந்த புதிய ஈமோஜியும் மக்களை சந்தோஷப்படுத்துவதில் ஒரு நல்ல பங்கு வகிக்கும் என நம்பலாம். 

Views: - 22

0

0