ஏசர் ஆஸ்பியர் 7 கேமிங் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்!

26 February 2021, 6:12 pm
Acer Aspire 7 gaming laptop launched in India
Quick Share

ஏசர் தனது சமீபத்திய கேமிங் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஏசர் ஆஸ்பியர் 7 என அழைக்கப்படும் கேமிங் லேப்டாப் ரூ.54,990 என்ற ஆரம்ப விலையுடன் வருகிறது, இது நிறுவனத்தின் வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டிலிருந்து வாங்குவதற்கு கிடைக்கிறது.

ஏசர் ஆஸ்பியர் 7 8 ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ.54,990 ஆகவும், 16 ஜிபி பதிப்பின் விலை ரூ.58,990 ஆகவும் நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

ஏசர் ஆஸ்பியர் 7 15.6 இன்ச் ஃபுல் HD டிஸ்ப்ளேவுடன் 1920 x 1080 பிக்சல்கள் திரை தெளிவுத்திறனுடன் 100 சதவீதம் sRGB வண்ண வரம்பு மற்றும் 81.61 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. லேப்டாப் AMD ரைசன் 5 5500U மொபைல் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது என்விடியா 1650 கிராபிக்ஸ் கார்டு உடன் வருகிறது.

ஏசர் ஆஸ்பியர் 7 32 ஜிபி DDR4 ரேம் மற்றும் 1 டிபி PCIe SSD ஸ்டோரேஜ் உடன் ஆதரிக்கப்படுகிறது. மடிக்கணினி LED-பேக்லிட் கீபோர்டு உடன் வருகிறது.

இணைப்பு முன்னணியில், இது ஒரு யூ.எஸ்.பி டைப் C போர்ட், இரண்டு யூ.எஸ்.பி 3.2 டைப்-A போர்ட்கள், HDMI போர்ட், 2 x 2 MU-MIMO தொழில்நுட்பத்துடன் வைஃபை 6 AX200 மற்றும் புளூடூத் 5.1 அம்சங்களைக் கொண்டுள்ளது. மடிக்கணினி 48Whr பேட்டரியுடன் வருகிறது, இது 11.5 மணி நேரம் வரை நீடிக்கும் என்று ஏசர் தெரிவித்துள்ளது.

Views: - 2

0

0