Acer Spin 7 5G: 5ஜி வசதியோடு 360° லேப்டாப்! விலைய கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

23 April 2021, 8:38 am
Acer Spin 7 5G Laptop Unveiled in India: Check Price, Specs
Quick Share

பல நாடுகளில் கோலோச்சும் கணினி தொழில்நுட்ப பிராண்ட் ஆன ஏசர் இந்தியாவில் தனது முதல் 5ஜி வசதியுடனான லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் ஏசர் ஸ்பின் 7 என்று பெயர் கொண்டுள்ளது.

ஏசர் ஸ்பின் 7 லேப்டாப் ஏசர் எக்ஸ்க்ளுசிவ் ஸ்டோர், ஏசர் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிற கடைகளிலும் ரூ.1,34,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

ஏசர் இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி சுதிர் கோயல் இந்த லேப்டாப்பின் அறிமுகம் குறித்து கூறுகையில், “எங்கள் முதல் மடிக்கணினியை இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8CX ஜென் 2 5ஜி வசதியுடன் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இது பல நாட்கள் பேட்டரி லைஃப், சிறப்பான வேகத்துடன் 5ஜி இணைப்பு வசதி, சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் பெயர்வுத்திறனை வழங்கக்கூடியது.” என்று தெரிவித்தார்.

ஏசர் ஸ்பின் 7 விவரக்குறிப்புகள்

  • இந் புதிய ஏசர் ஸ்பின் 7 மடிக்கணினி குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 cx gen 2 5ஜி செயலியுடன் 5ஜி இணைப்புக்கான ஆதரவை வழங்குகிறது.
  • இந்த மடிக்கணினி மெக்னீசியம்-அலுமினிய அலாய் கட்டமைப்புடன் 14 அங்குல முழு HD (1,920×1,080 பிக்சல்ஸ்) டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. சாதனம் touch screen பயன்முறையையும் கொண்டுள்ளது.
  • ஸ்பின் 7 ஒரு ஏசர் ஆக்டிவ் ஸ்டைலஸ் உடன் வருகிறது, இதை ரீசார்ஜ் செய்ய முடியும் மற்றும் 4,096 அளவிலான அழுத்த உணர்திறன் கொண்டது, இது சாதனத்தின் தொடுதிரையில் ஓவியம் வரைய அல்லது குறிப்பு எடுக்க Wacom AES 1.0 அம்சத்தைப் பயன்படுத்துகிறது.
  • இது 360 டிகிரி ஹின்ஜ் கொண்டுள்ளது. இதன் உதவியுடன் பயனர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப திரையை எளிதாகவும் நெகிழ்வாகவும் எப்படி வேண்டுமானாலும் இதை சுழற்றிக்கொள்ள முடியும். 
  • புதிய ஸ்பின் 7 விண்டோஸ் 10 ப்ரோ உடன் வருகிறது. இதோடு லேப்டாப்பிற்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களும் கிடைக்கிறது.

Views: - 2355

0

0