அப்போ பேஸ்புக், LinkedIN.. இப்போ கிளப்ஹவுஸ்! 13 லட்சம் நபர்களின் தரவுகள் கசிவு

Author: Dhivagar
12 April 2021, 9:29 am
After Facebook and LinkedIn, Clubhouse suffers data leak of 1.3 million users
Quick Share

பேஸ்புக் மற்றும் லிங்க்ட்இனுக்குப் பிறகு, ஆன்லைனில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட கிளப்ஹவுஸ் பயனர்களின் தரவுகள் கசிந்துள்ளது. சைபர் நியூஸின் அறிக்கையின்படி, 1.3 மில்லியன் கிளப்ஹவுஸ் பயனர்களின் தனிப்பட்ட தரவு கொண்ட ஒரு SQL தரவுத்தளம் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சைபர் நியூஸ் அறிக்கையின்படி, சமூக ஊடக சுயவிவரப் பெயர்கள், பயனர் ஐடி, புகைப்பட URL, ட்விட்டர் தகவல், பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை, கணக்கு உருவாக்கிய தேதி, மற்றும் பிற விவரங்கள் கொண்ட ஒரு SQL தரவுத்தளம் ஆன்லைனில் கசிந்துள்ளது.

இருப்பினும், கிரெடிட் கார்டு விவரங்கள் அல்லது சட்ட ஆவணங்கள் போன்ற தகவல்கள் கசியவில்லை.

சமீபத்தில் பேஸ்புக்கில் இருந்து 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களின் தரவுகள் கசிந்தது, அதற்கு பின்னர் LinkedIN தளத்திலிருந்தும் 500 மில்லியன் பயனர்களின் தரவுகள் கசிந்தது. இந்த தகவல்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்கிராப் செய்யப்பட்ட டேட்டா மூலம் hacking forum களில் விற்பனைக்கு வைக்கப்பட்டது.

ஃபிஷிங் அல்லது பிற வகையான ஆன்லைன் மோசடி மூலம் கசிந்த தகவல்களுக்கு உரிமையான பயனர்களை குறிவைக்க சைபர் கிரிமினல்களால் இந்த தரவுகள் தவறாக பயன்படுத்தப்படலாம் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.  அதுபோன்று ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பயனர்கள் தகவல்களை திருட பாஸ்வேர்டை பெற முயற்சிக்கவும் கூடும்.

எனவே, கிளப்ஹவுஸ் பயனர்கள் சந்தேகத்திற்கிடமான கிளப்ஹவுஸ் மெசேஜ்கள் மற்றும் அந்நியர்களிடமிருந்து இணைப்பு கோரிக்கைகளைத் தவிர்ப்பது நல்லது, மேலும் கிளப்ஹவுஸ் கணக்கின் பாஸ்வேர்டை ரீசெட் செய்வது நல்லது.

Views: - 217

0

0