இதுவரை ஸ்மார்ட் டிவி… ஆனால் இனி?! அதிரடி முடிவுடன் களமிறங்கும் TCL

15 April 2021, 5:56 pm
After Smart TV, TCL will launch a 6.8-inch smartphone and 10-inch tablet in India
Quick Share

எல்ஜி போன்ற பல முன்னணி நிறுவனங்களே ஸ்மார்ட்போன் வணிகத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளன. ஆனால், பிரபல ஸ்மார்ட் டிவி தயாரிப்பு நிறுவனமான டி.சி.எல் ஸ்மார்ட்போன் வணிகத்தில் நுழைவதற்கான ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நிறுவனத்தின் அறிவிப்பின்படி, டிசிஎல் பிராண்ட் விரைவில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் வணிகத்தில் நுழைய இருக்கிறது. டி.சி.எல் நிறுவனம் இந்தியாவில் பிரபலமான ஸ்மார்ட் டிவி வணிகத்தைக் கொண்டுள்ளது என்பது தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஸ்மார்ட் டிவியின் வெற்றிக்குப் பிறகு, TCL பிராண்ட் தனது 6.8 இன்ச் ஸ்மார்ட் டிவி மற்றும் 10 இன்ச் டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகவுள்ளது.

விரைவில் மடிக்கக்கூடிய டி.சி.எல் ஸ்மார்ட்போன் 

தி வெர்ஜ் தளத்தில் வெளியான அறிக்கையின்படி, நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் திரை அளவு 6.87 அங்குலமாக இருக்கும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு, நிறுவனம் பில்ட்-இன் டி.சி.எல் டிராகன்ஹின்ஜ் (DragonHinge) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். 

டிராகன்ஹின்ஜ் என்பது மூன்று பகுதி தொழில்நுட்பம் ஆகும். இது பூஜ்ஜியத்திலிருந்து 180 டிகிரிக்கு முழுமையாக உள்நோக்கி மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகிறது, இது TCL ஆல் உருவாக்கப்பட்டது. நெகிழ்வான உலோகம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் ஒரு சிறந்த டிஸ்பிளே பொருத்தப்படும்.

டி.சி.எல் நிறுவனம் 6.8 அங்குல திரை அளவு ஸ்மார்ட்போன் மற்றும் 10 அங்குல டேப்லெட்டுடன் 8.85 அங்குல பேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தக்கூடும். 

இருப்பினும், மூன்று சாதனங்களின் விவரக்குறிப்புகள் மற்றும் தகவல்கள் நிறுவனத்திடமிருந்து இப்போதைக்கு கிடைக்கவில்லை. நிறுவனம் தற்போது தொழில்நுட்ப பணிகளை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. 

நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தக்கூடும். இது சாம்சங் ​​கேலக்ஸி Z ஃபிளிப் மற்றும் கேலக்ஸி Z ஃபோல்டு 2 போன்றவற்றுக்குப் போட்டியாக இருக்கும்.

Views: - 63

0

0