இதில் வாங்கினால் ஏர்பாட்ஸ் புரோ இயர்டிப்ஸ் இப்போது வெறும் ரூ.700 தான்!

23 September 2020, 7:04 pm
AirPods Pro Ear Tips Now Available For Rs. 700; Cheapest Product On Apple Online Store India
Quick Share

ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோர் இறுதியாக இந்தியாவில் நேரலையில் உள்ளது, இதனால் வாடிக்கையாளர்கள் ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து நேரடியாக பொருட்களை வாங்கலாம். ஐபோன்கள், ஐபாட்கள் மற்றும் மேக் கம்பியூட்டர்கள் உள்ளிட்ட முழு அளவிலான தயாரிப்புகளும் இப்போது வாங்குவதற்கு கிடைக்கின்றன. ஆப்பிள் வழங்கும் முழு அளவிலான தயாரிப்புகளையும் நீங்கள் இப்போது ஆப்பிள் இந்தியா தளத்தில் பார்க்கலாம். மேலும் இந்தியாவில் ஆப்பிள் ஆன்லைன் ஸ்டோரில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்பு குறித்த ஒரு சிறிய தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆப்பிளின் ஒரு தயாரிப்பை இந்தியாவில் ரூ.1,000 க்கும்  குறைவான விலையில் வாங்க  முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? ஏர்பாட்ஸ் புரோ இயர்டிப்ஸ் நிறுவனத்திடமிருந்து மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் தயாரிப்பாக உள்ளது, இதன் விலை ரூ.700 மட்டுமே  ஆகும். 

ஏர்பாட்ஸ் புரோ இயர் டிப்ஸ் மூன்று அளவுகளில் (சிறிய, நடுத்தர மற்றும் பெரிய) கிடைக்கின்றன, மேலும் இந்த இயர் டிப்ஸ் இரண்டு ஜோடிகளை ரூ.700 விலைக்கு வாங்கலாம் மற்றும் இந்த இயர் டிப்ஸ் வெள்ளை நிறத்தில் கிடைக்கும். இயர் டிப்ஸ் தயாரிப்பை ஆப்பிள் இலவச விநியோகமாக வழங்குகிறது, எனவே டெலிவரிக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

அது மட்டுமல்லாமல், ஏர்பாட்ஸ் புரோ இயர்டிப்ஸ் எளிதான EMI திட்டத்துடனும் பெறலாம், அதாவது மாதம் ரூ.82 செலுத்துவதன் மூலமும் இதைப் பெற முடியும். இவை ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை மற்றும் ஏர்பாட்ஸ் புரோவுடன் மட்டுமே செயல்படும். 

இதை வாங்கலாமா?

நீங்கள் ஏற்கனவே ஏர்பாட்ஸ் புரோவை வைத்திருந்தால் அல்லது ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த ஜோடி இயர்டிப்ஸை தாராளமாக வாங்கலாம். 

Views: - 13

0

0