ரூ.18,699 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் வாங்கியது ஏர்டெல் | சிறப்பான சேவை வழங்க நம்பிக்கை!

2 March 2021, 3:52 pm
Airtel acquires spectrum worth ₹18,699 cr in auction
Quick Share

சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ரூ.18,699 கோடி மதிப்புள்ள ரேடியோவேவ்ஸை வாங்கியுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.

சப் GHz, மிட் பேண்ட் மற்றும் 2300 MHz பேண்ட்ஸ் முழுவதும் 355.45 MHz ஸ்பெக்ட்ரத்தை ஏர்டெல் வாங்கியுள்ளதாகவும், இந்தியாவில் “மிகவும் வலிமையான” ஸ்பெக்ட்ரமை வைத்திருப்பதாகவும் ஏர்டெல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் அனைத்தும் எதிர்காலத்தில் ஏர்டெல் 5 ஜி சேவைகளை வழங்க உதவும். 

ஏர்டெல் இப்போது சப் GHz ஸ்பெக்ட்ரமை இந்தியா முழுவதிற்கும் பெற்றுள்ளது, இது அதன் நெட்வொர்க்கை மேம்படுத்தவும் ஒவ்வொரு நகர்ப்புற நகரத்திலும் மேம்பட்ட நெட்வொர்க் கவரேஜை வழங்கவும் உதவும். மேலும், இந்த ஸ்பெக்ட்ரம் கிராமங்களிலும் அதன் கவரேஜை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று ஏர்டெல் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதிக அளவு ஸ்பெக்ட்ரம் கிடைத்த போதிலும், அதிக இருப்பு விலைகள் காரணமாக 700 MHz பேண்ட் ஏலம் போகவில்லை, என்றும் ஏர்டெல் சுட்டிக்காட்டியுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் எம்.டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் கூறுகையில், நிறுவனம் இப்போது “திடமான ஸ்பெக்ட்ரம் போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது, இது இந்தியாவில் சிறந்த மொபைல் பிராட்பேண்ட் அனுபவத்தை தொடர்ந்து வழங்க உதவும்”. என்று தெரிவித்தார்.

“எங்கள் இந்தியா முழுவதற்குமான சப் GHz பாதை மூலம் இந்தியாவில் கூடுதல் 90 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் சேவைகளின் சக்தியைக் கொண்டு செல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று மேலும் விட்டல் கூறினார்.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏழு பேன்ட்களில் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்தம் 2308.80 MHz ஸ்பெக்ட்ரத்தின் ஏலம் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

தொடக்க நாளான திங்களன்று, ரூ.77,146 கோடி மதிப்புள்ள ஏலங்களில் ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை பங்கேற்றன. அரசாங்கம் எதிர்பார்த்ததை விட ஏலம் சிறப்பாக இருந்ததாக தகவல் வெளியானது.

இருப்பினும், முதல் நாளில் 700 MHz மற்றும் 2500 MHz பேண்ட்களில் ஸ்பெக்ட்ரமை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

Views: - 1

0

0