Airtel Black | எல்லாமே ஒரே இடத்தில்! பயனர்களுக்கு செம குஷியான அறிவிப்பை வெளியிட்டது ஏர்டெல்

3 July 2021, 8:52 am
Airtel Black launched All in One Service
Quick Share

ஏர்டெல் இன்று வீடுகளுக்கான ஆல் இன் ஒன் தீர்வான ஏர்டெல் பிளாக் சேவையை இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம் செய்துள்ளது. ஏர்டெல் பிளாக் என்பது பல ஏர்டெல் சேவைகளை ஒன்றாக வழங்கும் ஒரே சேவையாகும். இந்த சேவைகளில் ஏர்டெல்லின் ஃபைபர், DTH மற்றும் மொபைல் திட்டங்கள் ஆகிய சேவைகள் அடங்கும்.

இன்றைய உலகில், வாடிக்கையாளரின் வீடே வேலையிடமாகவும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிடமாகவும் மாறியுள்ளது. எனவே அதிவேக டேட்டா சேவை, பொழுதுபோக்கு சேவை மற்றும் மொபைலில் தடையற்ற இணைப்பு போன்ற அனைத்தும் வீட்டிற்கு தேவைப்படுவதால் இந்த ஏர்டெல் பிளாக் சேவையை அறிமுகம் செய்வதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது

வெவ்வேறு நிறுவனங்களிடம் இருந்து வெவ்வேறு சேவைகளைப் பெறுவதால் ஏதேனும் ஒன்றில் பிரச்சினை என்றாலும் மொத்த வேலையும் பாதிக்கப்படும், அது மட்டுமில்லாமல் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து சேவைகளை பெற வேண்டுமென்றால் பல பில்களை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், இந்த சேவைகள் அனைத்தும் ஒருவரிடம் இருந்தே கிடைத்தால் பிரச்சினை குறித்து புகார் தெரிவித்து எளிதில் நடவடிக்கை எடுக்கவும் முடியும், பில்களையும் ஒரே இடத்தில் செலுத்த முடியும். இதன் விளைவாக, ஏர்டெல் தனது ‘ஏர்டெல் பிளாக்’ சேவையை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் பிளாக்: அம்சங்கள்

ஏர்டெல் பிளாக் என்பது ஒரு புதிய திட்டமாகும், இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஏர்டெல் சேவைகளை (ஃபைபர், டி.டி.எச், மொபைல்) ஒன்றாக பெற முடியும். இந்த சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கு ஒரே ஒரு பில் மட்டுமே வரும், அதுமட்டுமில்லாமல் நிறுவனத்தின் உறவு மேலாளர்களின் பிரத்யேக குழுவுடன் ஒரு வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைத்தாலே உங்கள் பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும். இவை அனைத்தும் மாறுதல் செலவுகள் ஏதுமின்றியும் மற்றும் நிறுவல் செலவுகள் ஏதுமின்றியும் கிடைக்கும்.

வாடிக்கையாளர் பராமரிப்பு எண்ணை அழைத்த 60 விநாடிகளுக்குள் ஒரு வாடிக்கையாளர் ஒரு பாதுகாப்பு பிரதிநிதியுடன் இணைய முடியும் என்று ஏர்டெல் கூறுகிறது. சர்வீஸ் செய்யும் போது தேவையான அனைத்து சேவைகளும் முன்னுரிமை அடிப்படையில், பயனருக்கு இலவசமாக கிடைக்கும். ஏர்டெல் பிளாக் திட்டத்துடன் DTH வசதியும் கூட கட்டண சேவையாக வழங்கப்படுகிறது.

ஏர்டெல் பிளாக் ஒரு எளிமையான அம்சத்தை வழங்குகிறது, அதன் மூலம் பயனர்கள் ஒவ்வொரு சேவைக்கும் பொருத்தமான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து பயனர் அவற்றை ஒன்றாக இணைத்து பில் செலுத்த முடியும்.

ஏர்டெல் பிளாக் திட்ட கட்டணங்கள்

ஏர்டெல் தனிப்பயனாக்கிக்கொள்ளக்கூடிய ஏர்டெல் பிளாக் திட்டங்களை வழங்குகிறது, அவற்றை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப உருவாக்கலாம். கூடுதலாக, இந்த திட்ட கட்டமைப்பானது சந்தையில் கிடைக்கும் எந்தவொரு திட்டத்தையும் இணைக்க உங்களை அனுமதிக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர், ஏர்டெல் DTH, ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ஆகிய அனைத்து சேவைகளும் இதில் அடங்கும்.

ஏர்டெல் பிளாக் தனிப்பயன் திட்டத்தை உருவாக்க, அதிகபட்சமாக 10 ஏர்டெல் பேரன்ட் போஸ்ட்பெய்ட் எண்கள், 2 ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் மற்றும் 2 ஏர்டெல் DTH முதன்மை இணைப்புகள் வரை இணைக்கலாம். நீங்கள் புதிய சேவையில் இணைந்து முதல் 30 நாட்களை இலவசமாகப் பெற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளை நீங்கள் தேர்வு செய்யலாம்.

ஏர்டெல் நான்கு நிலையான ஏர்டெல் பிளாக் திட்டங்களையும் வழங்குகிறது. அதில் ரூ.998 விலையிலான மாதாந்திர திட்டம் 2 மொபைல் இணைப்புகள் மற்றும் 1 DTH இணைப்புக்கு உங்களை அனுமதிக்கும். 

  • ரூ.1349 திட்டம் உங்களுக்கு 3 மொபைல் இணைப்புகளையும் 1 DTH இணைப்பையும் வழங்குகிறது. 
  • ரூ.1598 திட்டம் உங்களுக்கு 2 மொபைல் இணைப்புகள் மற்றும் 1 ஃபைபர் இணைப்பை வழங்குகிறது. 
  • ரூ.2099 விலையிலான ஆல் இன் ஒன் திட்டம் உங்களுக்கு 3 மொபைல் இணைப்புகள், 1 ஃபைபர் இணைப்பு மற்றும் 1 DTH இணைப்பு ஆகியவற்றை வழங்குகிறது.

ஏர்டெல் பிளாக் சேவையினைப் பெறுவது எப்படி?

  • Airtel Thanks பயன்பாட்டைப் பதிவிறக்கி, ஏர்டெல் பிளாக் திட்டத்தைப் பெறலாம் அல்லது உங்களுக்கு இருக்கும் சேவைகளை தொகுப்பதன் மூலம் உங்கள் சொந்த திட்டத்தை உருவாக்க முடியும்.
  • அப்படி இல்லையென்றால் உங்களுக்கு அருகிலுள்ள ஏர்டெல் ஸ்டோரை பார்வையிடவும், ஏர்டெல் குழுவினர் உங்களுக்கு ஏர்டெல் பிளாக் சேவையை பெற உதவுவார்கள்.
  • 8826655555 என்ற எண்ணிற்கு மிஸ்டுகால் கொடுத்தால், உங்களை ஏர்டெல் பிளாக் உறுப்பினராக ஆக மேம்படுத்த ஒரு ஏர்டெல் நிர்வாகி உங்களை அணுகுவார்

புதிய சேவையைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு நீங்கள் ஏர்டெல்லின் வலைத்தளத்தைப் பார்வையிட்டு பயனடையலாம்.

Views: - 174

0

0