திடீரென கட்டணங்களை உயர்த்தியது ஏர்டெல் | செம ஷாக்கில் ஏர்டெல் பயனர்கள்!

Author: Dhivagar
23 July 2021, 3:13 pm
Airtel hikes postpaid tariffs, plans start at Rs 299
Quick Share

கார்ப்பரேட் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்காக புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஏர்டெல் இன்று அறிவித்துள்ளது.

தொற்றுநோய்க் காரணமாக, WFH (வீட்டிலிருந்து வேலை) மற்றும் ஆன்லைன் கல்வி முறை என்பது புதிய சாதாரணமாகிவிட்டதால் அதிவேக டேட்டாவுக்கான தேவை அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், 5ஜி ரெடி நெட்வொர்க்கின் ஆதரவுடன் தரவு நன்மைகளை வழங்க ஏர்டெல் தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களை மேலும் எளிதாக்கியுள்ளது. தொகுக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் வணிக உற்பத்தித்திறன் கருவிகள் போன்ற பிரத்யேக நன்மைகளுடன் இந்த திட்டங்கள் கிடைக்கின்றன.

வணிக பயனர்களுக்கான கார்ப்பரேட் திட்டங்களின் விலை ரூ.299, ரூ.349, ரூ.399, ரூ.499 மற்றும் ரூ.1599 ஆகும். அவை முறையே 30 ஜிபி, 40 ஜிபி, 60 ஜிபி, 100 ஜிபி மற்றும் 500 ஜிபி டேட்டாவை  வழங்குகின்றன.

ஏர்டெல் கார்ப்பரேட் திட்டங்கள்

Airtel hikes postpaid tariffs, plans start at Rs 299

இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு சேவையோடு  வருகின்றன. ஏர்டெல் கால் மேனேஜர் போன்ற வணிக கருவிகள் இதனுடன் கிடைக்கிறது. ரூ.399 இலிருந்து ஆரம்பமாகும் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் போன்றவற்றுக்கான பிரீமியம் அணுகல் கிடைக்கும். மேலும் ஒரு வருடத்திற்கு ஷா அகாடமி சந்தாவும் இதனுடன் கிடைக்கும்.

ரூ.499 மற்றும் ரூ.1599 விலையிலான திட்டங்கள் 1 வருட அமேசான் பிரைம் சந்தா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தா 1 வருடத்திற்கும், VIP சர்வீஸ், ஏர்டெல் செக்யூர் ஆகிய சேவைகளுக்கான அணுகலும் கிடைக்கும். கூடுதலாக, விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி உள்ளது போன்றவற்றுக்கான அணுகலும் கிடைக்கும்.

தகுதியான அனைத்து ஏர்டெல் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களும் புதிய திட்டங்களுக்கு பொருந்தும் வகையில் அவர்களின் அடுத்தடுத்த பில்லிங் சுழற்சிகளிலிருந்து இடம்பெயர்த்தப்படுவார்கள்.

சில்லறை போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ.399, ரூ.499, ரூ.999 மற்றும் ரூ.1599 ஆகும். அவை முறையே 40 ஜிபி, 75 ஜிபி, 210 ஜிபி மற்றும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகின்றன.

இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு சேவையையும் வழங்கும். ரூ.399 திட்டத்தில் விங்க் மியூசிக் ஆப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், ஷா அகாடமி (1 வருடம்), இலவச ஹலோட்டியூன்ஸ் ஆகிய சேவைகளும் கிடைக்கும். மற்ற அனைத்து திட்டங்களும் அமேசான் பிரைம் (1 வருடம்), டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP (1 வருடம்), VIP சேவை, ஏர்டெல் செக்யூர், விங்க் மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஷா அகாடமி ஆகியவற்றை வழங்குகின்றன.

நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களுக்கான 749 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை நிறுத்தியுள்ளது. மேம்பட்ட தரவு நன்மைகளைக் கொண்ட ஒரே ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமாக இப்போது ரூ.999 திட்டம் மட்டுமே கிடைக்கிறது. இப்போது, ​​வாடிக்கையாளர்கள் எந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டத்திற்கும் ஒரு இணைப்பை வெறும் ரூ.299 / சிம் மூலம் பெறலாம். அவர்களுக்கு 30 ஜிபி கூடுதல் டேட்டா , வரம்பற்ற அழைப்பு மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் கிடைக்கும்.

Views: - 148

0

0