OTT சந்தாக்களுடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் அறிமுகம் | முழு விவரங்கள் இங்கே

9 November 2020, 8:50 am
Airtel Launches Xstream Box With Bundled OTT Subscription
Quick Share

புதிய பயனர்களை அதன் டிஜிட்டல் டிவி தளத்தை நோக்கி ஈர்க்கும் நோக்கத்துடன், ஏர்டெல் தனது எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் உடன் OTT சந்தாக்களையும் வழங்குகிறது. புதிய வாடிக்கையாளர்களுக்காக எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் பாக்ஸ் பிரீமியம் மற்றும் பாக்ஸ் பேசிக் என அழைக்கப்படுகிறது.

இந்த பாக்ஸ் ரூ.2,399 மதிப்புள்ள OTT சந்தாவுடன் கிடைக்கின்றன. எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் பேசிக் அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ஒரு வாடிக்கையாளர் ஆன்லைனில் வாங்கினால், செட்-டாப் பெட்டிகளில் 10 சதவீத தள்ளுபடியையும் நிறுவனம் வழங்குகிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஆல் இன் ஒன் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த நேரத்தில் இந்த புதிய சலுகை வருகிறது. இந்த ப்ரீபெய்ட் ஆண்டு திட்டங்கள் ரூ.1,001, ரூ.1,301, மற்றும் ரூ.1,501 விலைகளில் கிடைக்கிறது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டங்கள்: விவரங்கள்

  • ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் திட்டத்தின் விலை ரூ.4,898 ஆகும். இந்தத் திட்டம் ரூ.462 மதிப்புள்ள சேனல் திட்டங்களுக்கு இலவச சந்தா போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. 
  • கூடுதலாக, நிறுவனம் ஏழு நாட்களுக்குள் பேக் மாற்றத்திற்கான அனுமதியையும் வழங்குகிறது.
  • இந்த சலுகைகளைத் தவிர, நிறுவனம் ரூ.999 மதிப்புள்ள அமேசான் பிரைம் சந்தாவையும், ரூ. 399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும், மற்றும் ரூ.999 மதிப்புள்ள ஜீ 5 சந்தாவையும் வழங்குகிறது. 
  • கூடுதலாக, நிறுவனம் ரூ.1,299 மதிப்புள்ள எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. இந்த சலுகையும் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் பேசிக் திட்டம்: விவரங்கள்

  • அடுத்ததாக, ஒரு எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் பேசிக் திட்டம் ஒன்று உள்ளது, இதன் விலை ரூ.2,499 ஆகும். 
  • இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் பேசிக் திட்டம் ஜீ 5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உட்பட ரூ.1,699  மதிப்புள்ள ஒரு வருடத்திற்கான OTT பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது. 
  • இந்த திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவிற்கும் இலவச அணுகலை வழங்குகிறது. 
  • இருப்பினும், நிறுவனம் இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் சந்தாவை வழங்கவில்லை. 
  • இந்த ஆண்ட்ராய்டு செட்-டாப் பாக்ஸிலும் நிறுவனம் தள்ளுபடியை வழங்குகிறது.

Views: - 20

0

0