ஒரு வருடத்தில் காப்பர் நெட்வொர்க்கை நிறுத்தப்போகும் ஏர்டெல் | FTTH சேவைகளை வழங்க ஏற்பாடு
6 February 2021, 11:42 amஏர்டெல் தனது காப்பர் உள்கட்டமைப்பை ஒரு வருடத்தில் மூட திட்டமிட்டுள்ளதாகவும், இது இந்தியாவில் முழுவதுமாக எஃப்.டி.டி.எச் சேவைக்கு மாற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தவிர, உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடனான கூட்டணி மூலம் 1000 நகரங்களில் இணைய சேவைகளை வழங்கவும் நிறுவனம் விரும்புகிறது. நிறுவனம் 120 நகரங்களில் இணைய சேவைகளை தற்போது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
“பிராட்பேண்ட் துறை மிகவும் வலுவான வளர்ச்சியைக் காண்கிறது, அடுத்த சில ஆண்டுகளில் அதிவேக பிராட்பேண்ட் சேவைக்கான தேவை இருப்பதால் இதற்கான வணிகத்தை அளவிடுவதற்கான நேரம் இது என்று நான் நம்புகிறேன். இந்த வணிகத்தில் விரிவாக்கம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த எங்கள் முக்கிய மூலோபாயத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்துகிறோம்” என்று ஏர்டெல் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் அதன் மூன்றாம் காலாண்டு (Q3) முடிவுகளை அறிவித்த பின்னர் முன்னிலைப்படுத்தியுள்ளார். இதே காலாண்டில் நிறுவனம் 1.4 மில்லியன் ஃபைபர் வீடுகளை சேர்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏர்டெல் நிகர லாபம் Q3 நிதியாண்டில் 854 கோடி ரூபாய் ஆகும்.
0
0