தொடர்ந்து பயனர்களை ஏமாற்றுத்துக்கு உள்ளாக்கும் ஏர்டெல்! இப்போது இந்த சேவையும் ரத்து செய்யப்பட்டது!
6 August 2020, 2:21 pmசமீபத்தில், ஏர்டெல் அதன் ப்ரீபெய்டு திட்ட பட்டியலிலிருந்து சம்மர் போனான்ஸா விளம்பர சலுகையை அகற்றி, அதன் மை பிளான் இன்ஃபினிட்டி மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரிலிருந்து ஜீ 5 பிரீமியம் சந்தாவை நீக்கியது, அதாவது நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு ஜீ 5 பிரீமியம் சந்தாவையும் வழங்கவில்லை.
அதாவது, ஜீ5 சந்தா இனி ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையின் ஒரு பகுதியாக இருக்காது, இப்போது பயனரின் அமேசான் பிரைம் சந்தா மற்றும் எக்ஸ்ட்ரீம் பயன்பாட்டு நன்மைகளை மட்டுமே அவர்களின் பிராட்பேண்ட் திட்டங்கள் பெறும்.
நிறுவனம் ரூ.289 மற்றும் ரூ.79 மதிப்பில் அதன் டிஜிட்டல் நெட்வொர்க்கிற்குள் இரண்டு திட்டங்களை புதிதாக அறிவித்த பின்னர் புதிய அறிவிப்பு வருகிறது. முன்னதாக, போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் திட்டங்களில் இந்த நன்மை கிடைத்தது.
ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள்: விரிவான விளக்கம்
தற்போது, ஏர்டெல் நான்கு திட்டங்களை வழங்கி வருகிறது. இவை ரூ.799 முதல் துவங்கி ரூ.3,999 வரை செல்கிறது.
முதலாவதாக ரூ.799 திட்டம் 150 ஜிபி தரவு, வரம்பற்ற லோக்கல் அழைப்பு மற்றும் SSD அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இதில் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள், 100 Mbps வேகம் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் நன்மைகள் ஆகியவை அடங்கும்.
ரூ.999 பொழுதுபோக்கு திட்டம், 300 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 200 Mbps வேகம், அமேசான் பிரைம் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் நன்மை ஆகியவற்றை வழங்குகிறது.
அடுத்ததாக ரூ.1,499 திட்டம் உங்களுக்கு 500 ஜிபி டேட்டா, 300 Mbps வேகம், வரம்பற்ற அழைப்பு, அமேசான் பிரைம் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் பயன்பாட்டு சலுகையை வழங்குகிறது. இந்த திட்டம் பிரீமியம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.
அதே நேரத்தில் VIP திட்டம் 1 Gbps வேகம், வரம்பற்ற அழைப்பு மற்றும் இணையத்தை வழங்குகிறது. இதில் அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் நன்மைகளை ரூ.3,999 மதிப்பில் வழங்குகிறது.
ஏர்டெலுடன் அமேசான் கூட்டணி
நாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு கிளவுட் சேவைகளை வழங்க அமேசான் வலை சேவைகளுடனான தனது கூட்டணியையும் ஏர்டெல் அறிவித்துள்ளது. தற்போது, ஏர்டெல் தனது சேவைகளை 2,500 பெரிய நிறுவனங்களுக்கும் 10 லட்சம் வளர்ந்து வரும் வணிகங்களுக்கும் வழங்கி வருகிறது.
“ஏர்டெல் கிளவுட் AWS நிபுணத்துவ சேவைகளால் ஆதரிக்கப்படும் AWS கிளவுட் பயிற்சியை உருவாக்கும், அத்துடன் வேறுபட்ட ஏர்டெல் கிளவுட் தயாரிப்புகளையும் உருவாக்கும்” என்று தொலைத்தொடர்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.