வீட்டிலிருந்து வேலைச் செய்ய சிறந்த ப்ரீபெய்டு திட்டம் எது? வோடபோன், ஜியோ, ஏர்டெல் திட்டங்கள் – ஒப்பீடு

16 September 2020, 8:44 am
Airtel Vs Reliance Jio Vs Vodafone-Idea Which Work From Home Plan Is The best
Quick Share

வீட்டிலிருந்து வேலை செய்வது என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது, இது எவ்வளவு காலம் தொடரும் என்பது யாருக்கும் தெரியாது. ஊரடங்கிலிருந்து தளர்வுகள் வழங்கப்பட்டு சிலர் வேலைகளைப் பார்க்க அலுவலகங்கள் சென்றாலும், பலர் இன்னும் வீட்டில் இருந்தே தான் தங்கள் பணிகளைச் செய்து வருகின்றனர். எதிர்பாராத வகையில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, நாம் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையைக் கொண்டு வந்துள்ளது.

அலுவலகங்களில் உள்ள டெஸ்க்டாப்புகளில் உட்கார்ந்து வேலைச் செய்ய துவங்கும் போது நாம் எப்போதும் இணைய சேவையைக் குறித்து கவலைப்பட்டதே இல்லை. ஆனால், இப்போதோ எந்த ப்ரீபெய்டு திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்வது என்று குழம்பிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும், ஜியோ, வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகியவை இந்த சூழ்நிலைகளைப் புரிந்துக்கொண்டு புதிய Work From Home ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளனர். அதில் சிறந்த திட்டம் எது என்று தான் பார்க்கப்போகிறோம்.

இந்தப் பதிவில், தொலைதொடர்பு நிறுவனங்களால் வழங்கப்பட்ட சிறந்த ப்ரீபெய்டு திட்டங்களில் சுமார் 350 ரூபாய்க்கு குறைவான விலைக்கொண்ட திட்டங்களைப் பற்றி மட்டும் பார்க்கலாம்:

ஏர்டெல் ரூ.349 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவை 28 நாட்கள் வழங்கும். இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் வரம்பற்ற அழைப்பு வசதியையும் வழங்குகிறது. ஏர்டெல் ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுடன் கூடுதலாக அமேசான் பிரைமுக்கு ஒரு மாத சந்தாவையும் இந்த திட்டம் வழங்குகிறது.

Vi / வோடபோன்-ஐடியா ரூ.351 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்

புதிதாக மறுபெயரிடப்பட்ட வோடபோன்-ஐடியா, Vi, புதிய ரூ.351 ப்ரீபெய்டு திட்டத்தை வழங்குகிறது, இது 100 ஜிபி தரவை 56 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் வழங்குகிறது. இந்த திட்டம் டெல்லி, ஆந்திரா, பீகார், குஜராத், கேரளா மற்றும் மத்திய பிரதேச வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.349 ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம்

ஜியோ வழங்கும் ரூ.349 திட்டம் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்பு மற்றும் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1,000 நிமிட FUP வரம்புடன் ஒரு நாளைக்கு ரூ .3 ஜிபி தரவை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

எது சிறந்தது?

ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ. 349 மற்ற திட்டங்களை விட  மிகவும் சிறப்பாக உள்ளது.

Views: - 0

0

0