உலகின் மிக நீளமான நதிகள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்கள்

12 July 2021, 5:35 pm
All you need to know about the five longest rivers in the world
Quick Share

நதிகளால் தான் மிகப்பெரிய நாகரிகங்கள் செழித்தோங்கி இருந்தன இருக்கின்றன. இயற்கை தாயிடமிருந்து கிடைக்கும் ஆறுகள் தான் நம் தேவைக்கான நீர் ஆதாரமாக உள்ளன. அப்படி பல ஆறுகள் இருக்கையில் உலகிலேயே மிகப்பெரிய ஆறுகள் என்னென்ன அவை எங்குள்ளது, எவ்வளவு நீளமானது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

உலகின் மிக நீளமான ஐந்து நதிகளின் பட்டியல்:

1. நைல் நதி

All you need to know about the five longest rivers in the world

உலகின் மிக நீளமான நதி நைல் நதி தான். இது சுமார் 6,650 கி.மீ நீளம் கொண்டது. இது வடகிழக்கு ஆபிரிக்காவின் பல நாடுகளின் உயிர்நாடியாக விளங்குகிறது. தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ ஜனநாயக குடியரசு, கென்யா, எத்தியோப்பியா, எரிட்ரியா, தெற்கு சூடான், சூடான் மற்றும் எகிப்து ஆகிய 11 நாடுகள் அதன் நீரைப் பகிர்ந்து கொள்கின்றன.

2. அமேசான் நதி 

தென் அமெரிக்காவின் அமேசான் நதி 6,400 கி.மீ நீளமுள்ள உலகின் இரண்டாவது மிக நீளமான நதியாகும். இது பிரேசில், பெரு, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், வெனிசுலா மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கு ஆதாரமாக விளங்குகிறது.

All you need to know about the five longest rivers in the world

3. யாங்சே நதி 

All you need to know about the five longest rivers in the world

சீனாவில் பாயும், யாங்சே நதி உலகின் மூன்றாவது மிக நீளமான நதி மட்டுமல்ல, ஆசியாவின் மிக நீளமான நதியும் ஆகும். இதன் நீளம் 6,300 கி.மீ. ஆகும்.

4. மிசிசிப்பி-மிசௌரி நதி

All you need to know about the five longest rivers in the world

உலகின் நான்காவது நீளமான மிசிசிப்பி-மிசௌரி நதி வட அமெரிக்காவில் பாய்ந்தோடுகிறது. இது 6,274 கி.மீ நீளம் கொண்டது மற்றும் மெக்சிகோ வளைகுடாவை நோக்கி பாய்கிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளில் இது நீர் ஆதாரமாக விளங்குகிறது.

5. ஏநிசை நதி

5,539 கி.மீ நீளம் கொண்ட ஏநிசை நதி தான் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நதியாகும். ரஷ்யாவிலும், மங்கோலியாவிலும் பாய்கின்றது. 

All you need to know about the five longest rivers in the world

Views: - 108

0

0