IMDA சான்றிதழ் பெற்றது ரெட்மி நோட் 10 4ஜி ஸ்மார்ட்போன் | முக்கிய விவரங்கள் இங்கே

26 November 2020, 2:56 pm
Alleged Redmi Note 10 4G Bags IMDA Certification
Quick Share

சியோமியின் புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்கள் இன்று அறிமுகமாகவுள்ளது. வரவிருக்கும் தொடரில் மூன்று வெவ்வேறு மாடல்கள் இருக்கும். ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 புரோ 5 ஜி தவிர, நிறுவனம் 4ஜி மாடலையும் அறிமுகப்படுத்த உள்ளது. வரவிருக்கும் தொடரில் M2010J19SC என்ற மாடல் எண் கொண்டது 4ஜி மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இதேபோன்ற மாதிரி எண்ணைக் கொண்ட புதிய சாதனம் சான்றளிக்கப்பட்டுள்ளது.

புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 

IMDA சான்றிதழைப் பெறுவதற்கான சமீபத்திய ரெட்மி ஸ்மார்ட்போன் M2010J9SG என்ற மாடல் எண்ணைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் வரும் மாதங்களில் இந்தோனேசியாவில் வெளியாகும் என்பதை இது குறிக்கிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. 

இந்த சாதனம் உலக சந்தையில் ரெட்மி நோட் 10 ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் நிலையான 4 ஜி இணைப்புக்கான ஆதரவைக் கொண்டிருக்கும். இந்த வரவிருக்கும் ரெட்மி ஸ்மார்ட்போனின் குறிப்புகளை டிப்ஸ்டர் முகுல் சர்மா வெளியிட்டார். நினைவுகூர, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போகோ M3 போனும் இதேபோன்ற மாதிரி எண்ணை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, ஸ்மார்ட்போன் போகோ M3 மற்றும் ரெட்மி நோட் 9 5ஜி போன்ற வன்பொருளைக் கொண்டிருக்க வாய்ப்புண்டு.

ரெட்மி நோட் 10 4 ஜி – எதிர்பார்க்கப்படும் விவரங்கள்

ரெட்மி நோட் 10 4ஜி 6.53 இன்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கக்கூடும். இது LCD பேனலாக இருக்கலாம், இது 1080 x 2400 பிக்சல்கள் உடன் FHD+ திரை தெளிவுத்திறனை வழங்கும். இந்த கைபேசி குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC ஆல் இயக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 10 OS இல் துவங்கி MIUI 12 இன்டர்ஃபேஸ் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக, சாதனம் 48MP முதன்மை லென்ஸுடன் மூன்று-லென்ஸ் கேமரா தொகுதியைக் கொண்டிருக்கக்கூடும். ஒரு ஜோடி 2MP சென்சார்களும் இருக்கலாம். இங்குள்ள செல்ஃபி கேமரா 8MP சென்சார் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 22.5W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 6,000 mAh பேட்டரி இடம்பெறக்கூடும்.

Views: - 27

0

0