ஏசி, ஃப்ரிட்ஜ்களுக்கு செம ஆஃபர்களை அறிவித்தது அமேசான்! 50% வரை தள்ளுபடி!

27 February 2021, 9:17 am
Amazon announces Summer Appliances Fest
Quick Share

அமேசான் இந்தியா வெள்ளிக்கிழமை தனது தளத்தில் “சம்மர் அப்ளையன்சஸ் ஃபெஸ்ட்” விற்பனையை அறிவித்துள்ளது. இந்த விற்பனை பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இந்த விற்பனையின் ஒரு பகுதியாக, ஏசி, ஃப்ரிட்ஜ், கூலர்ஸ் உள்ளிட்ட கோடைகால உபகரணங்களை வாங்குவதற்கு ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் 50% வரை தள்ளுபடியை வழங்கும்.

இவை தவிர, ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் EMI வழியாக குறைந்தபட்சம், ரூ.7,500 மதிப்பில் பொருட்களை வாங்கினால் அமேசான் இந்தியா 10% தள்ளுபடியாக ரூ.1,500 வரை அளிக்கிறது.

சரி, இப்போது சிறந்த சலுகைகளின் பட்டியலை இப்போது பார்க்கலாம்:

வோல்டாஸ், டெய்கின், எல்ஜி, வேர்ல்பூல் மற்றும் சான்யோ போன்ற நிறுவனங்களிலிருந்து ஏர் கண்டிஷனர்களுக்கு அமேசான் இந்தியா 40% வரை தள்ளுபடி அளிக்கிறது.

ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனம் ரூ.22,999 முதல் ஸ்ப்ளிட் இன்வெர்ட்டர் ஏசிகளையும், விண்டோ ஏசிகளை ரூ.17,490 விலையிலும் வழங்குகிறது.

வாடிக்கையாளர்கள் அமேசான் பேசிக்ஸ் மூலம் ரூ.22,499 விலையில் ஸ்ப்ளிட் ஏ.சி.க்களைப் பெற முடியும்.

எல்ஜி, சாம்சங், வேர்ல்பூல், ஹையர் மற்றும் கோத்ரேஜ் போன்ற நிறுவனங்களின் குளிர்சாதன பெட்டிகளுக்கு அமேசான் 35% வரை தள்ளுபடி வழங்குகிறது. ரூ.10,499 தொடங்கி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட குளிர்சாதன பெட்டிகளில் குறைந்தபட்சம் 10% வரையும் தள்ளுபடியை நிறுவனம் வழங்குகிறது.

இது ரூ.13,790 முதல் ஆற்றல் திறன் கொண்ட குளிர்சாதன பெட்டிகளையும், கன்வெர்ட்டிபிள் குளிர்சாதன பெட்டிகளை ரூ.21,290 விலையிலும் வழங்குகிறது.

ஆர்வமுள்ள வடிக்கையாளர்கள் எக்சேஞ்ச் செய்யும்போது சைடு-பை-சைடு குளிர்சாதன பெட்டிகளில் ரூ.12,000 வரை தள்ளுபடிகளைப் பெறலாம்.

நிறுவனம் ஒரு மாதத்திற்கு ரூ.657 முதல் தொடங்கி சிறந்த பிராண்டுகளின் குளிர்சாதன பெட்டிகளையும், no cost EMI விருப்பத்தையும் வழங்குகிறது.

கடைசியாக, சிம்பொனி, க்ராம்ப்டன், பஜாஜ் மற்றும் ஹேவல்ஸ் போன்ற நிறுவனங்களின் கூலர்களுக்கு அமேசான் இந்தியா 50% வரை தள்ளுபடி அளிக்கிறது.

Views: - 11

1

0