இனிமேல் நீங்கள் ஆஃபருடன் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்! IRCTC உடன் அமேசான் கூட்டணி!

Author: Dhivagar
7 October 2020, 6:03 pm
Amazon India Launches Train Ticket Booking Service
Quick Share

அமேசான் இந்தியா இப்போது இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக அமேசான் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த அம்சம் தற்போது வலைத்தளம் மற்றும் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் மட்டுமே கிடைக்கிறது என்று அமேசான் கூறியுள்ளது.

அமேசான் ஜீரோ பேமெண்ட் கேட்வே மற்றும் சேவை கட்டணங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. அமேசான் கேஷ்பேக்குகளையும் வழங்குகிறது, இது பணம் செலுத்தும் நேரத்தில் தானாகவே பயன்படுத்தப்படும். இந்த சேவை சில கிளிக்குகளில் எளிதில் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

உங்கள் அமேசான் பே பேலன்சில் உடனடியாக ரீஃபண்ட்களைப் பெறலாம். இதில் ஆட்டோ-ஃபில் சேவையும் உள்ளது, இது பயணிகளின் தரவை கூடுதல் கட்டணங்களுக்காக சேமித்து வைக்கும்.

அமேசானில் முதல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மட்டுமே கேஷ்பேக் சலுகைப் பொருந்தும். நீங்கள் பெறும் கேஷ்பேக்கின் அளவு பின்வரும் விவரங்களின்படி முன்பதிவு தொகை மற்றும் ‘பிரைம் உறுப்பினர்’ நிலையைப் பொறுத்தது. பிரைம் உறுப்பினர்கள் பிளாட் 12% கேஷ்பேக், ரூ.120 வரையும், பிரைம் இல்லாத உறுப்பினர்கள் 10% கேஷ்பேக் உடன் ரூ.100 வரை பெறுவார்கள்.

வாடிக்கையாளர்கள் விரும்பும் புறப்படும் தேதி மற்றும் இலக்கை நிரப்ப முடியும். மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, அமேசான் பே பேலன்ஸ் போன்ற பல கட்டண விருப்பங்கள் இருக்கும். பயணம் உறுதியாகவில்லை என்றால், வாடிக்கையாளர்களும் தங்கள் முன்பதிவை ரத்து செய்யவும் முடியும். 

முன்பதிவு செய்த பிறகு, வாடிக்கையாளர்கள் தங்கள் PNR நிலையை சரிபார்க்கலாம், டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பின்னர் ரத்து செய்யலாம். மேலே கூறியது போல், நீங்கள் அமேசான் பே பேலன்ஸ் கட்டண முறையைப் பயன்படுத்தினால், ரத்து செய்யப்பட்ட உடனே பணத்தைத் திரும்பப் பெறலாம்.

Views: - 67

0

0