நீங்களுமா… மெம்பர்ஷிப் திட்டத்திற்கான விலையுர்வை அறிவித்த Amazon Prime!!!

Author: Hemalatha Ramkumar
25 November 2021, 3:17 pm
Quick Share

நீங்கள் Amazon Prime இன் சந்தாதாரரா அல்லது அதன் சப்ஸ்கிரிப்ஷனை பெற திட்டமிட்டுள்ளீர்களா? ஆம் எனில், உங்களுக்கான முக்கியமான அப்டேட் இதோ. அமேசான் பிரைம்க்கான சந்தா விலை இந்தியாவில் டிசம்பர் 14, 2021 முதல் அதிகரிக்கப் போகிறது. இந்த தகவலை நிறுவனம் அதன் FAQ பக்கத்தில் வழங்கியுள்ளது. “ஒரு வேலை நீங்கள் பிரைமில் சேர யோசனை வைத்து இருந்தால் தற்போதே, ​​நீங்கள் பிரைமில் சேர்ந்து அதன் பழைய விலையை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், 13 டிசம்பர் 2021 அன்று இரவு 11:59 PM அன்று அமேசான் பிரைம்க்கான சலுகை விலை முடிவடைகிறது. முடிந்தவரை விரைவில் பிரைமைப் புதுப்பித்துக்கொள்ளவும் அல்லது புதிதாக வாங்க திட்டமிட்டு இருந்தால் உடனே வாங்க பரிந்துரைக்கிறோம். ” என்று நிறுவனம் கூறியது.

அமேசான் பிரைம் சந்தா விலை உயர்கிறது:
நிறுவனம் வழங்கிய தகவலின்படி, பிரைம் மெம்பர்ஷிப்பின் புதிய விலை இங்கே காட்டப்பட்டுள்ளது: மாதாந்திர திட்டத்தின் சலுகை விலை ₹129 மற்றும் இந்த சலுகை காலம் டிசம்பர் 13-ம் தேதியுடன் முடிவடைந்த பிறகு ₹179 ஆக உயரும். இதேபோல், காலாண்டு ₹329 ஆஃபர் விலை ₹459 ஆகவும், ஆண்டு சலுகை விலை ₹999 யில் இருந்து ₹1499 ஆகவும் இருக்கும். www.amazon.in/prime என்ற இணையதளத்திற்குச் சென்றும் நீங்கள் விலைகளை பார்க்கலாம்.

ஆதரவுப் பக்கத்தின்படி, உங்கள் இலவச சோதனை அல்லது உறுப்பினர் காலம் முடிவடையும் போது, ​​பதிவு செய்யும் நேரத்தில் வழங்கப்பட்ட உங்கள் கார்டுக்கு கட்டணம் வசூலிப்பதன் மூலம் Amazon தானாகவே உங்கள் மெம்பர்ஷிப்பைப் புதுப்பிக்கும். மேலும், குறிப்பிட்ட கால சலுகையின் போது நீங்கள் பிரைமில் சேருகிறீர்கள் என்றால், ஆரம்ப உறுப்பினர் காலத்திற்கு விதிக்கப்படும் விலையே சலுகை விலையாக இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், முதல் உறுப்பினர் காலத்திற்குப் பிறகு உங்கள் முதல் புதுப்பித்தலுக்கு புதிய விலை பொருந்தும்.

அதேசமயம், தற்போதுள்ள பிரைம் உறுப்பினர்கள், தங்களின் தற்போதைய பிரைம் உறுப்பினர் காலம் வரை தங்களது பலன்களை தொடர்ந்து அனுபவிக்க முடியும். அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மேலும், இந்த விலை உயர்வுக்கான காரணம் குறித்தும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டதில் இருந்து, பிரைம் உறுப்பினர்களுக்கு வழங்கும் மதிப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரைம் ஷாப்பிங், சேமிப்பு மற்றும் பொழுதுபோக்கு நன்மைகளின் இணையற்ற சேவையை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் பொழுதுபோக்காகவும் மாற்றுகிறது. அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பிரைமை இன்னும் மதிப்புமிக்கதாக மாற்றுவதில் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறோம்.” என்று அமேசான் தெரிவித்துள்ளது.

“மில்லியன் கணக்கான பொருட்களுக்கு பிரைமில் 1-நாள் டெலிவரி கிடைக்கிறது. பிரைம் வீடியோ பகுதியில் 10 மொழிகளில் விருது பெற்ற திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் Amazon Originals ஆகியவற்றுக்கான வரம்பற்ற அணுகலை வழங்குகிறது. மேலும், உறுப்பினர்கள் Amazon Music மூலம் 70 மில்லியன் பாடல்களை விளம்பரமின்றி அணுகலாம். அமேசான் பே ICICI வங்கி கிரெடிட் கார்டு மூலம் அமேசான் ஷாப்பிங்கில் வரம்பற்ற 5% ரிவார்ட் புள்ளிகள், பிரைம் கேமிங்குடன் கூடிய பிரபலமான மொபைல் கேம்களில் இலவச இன்-கேம் உள்ளடக்கத்திற்கான அணுகல், பிரைம் ரீடிங்குடன் ஆயிரக்கணக்கான புத்தகங்களுக்கான இலவச அணுகல்.” என்று அது மேலும் கூறியது.

Views: - 162

0

0

Leave a Reply