மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் சுமார் ரூ.36 லட்சம் பரிசு பெற்ற இந்தியர்! எதற்கு தெரியுமா?
4 March 2021, 1:17 pmமைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு இந்திய ஆராய்ச்சியாளருக்கு 50,000 டாலர்களை (சுமார் ரூ.36,36,875) நிறுவனத்தின் பக் பவுண்டி திட்டத்தின் கீழ் வெகுமதியாக வழங்கியுள்ளது. மைக்ரோசாஃப்ட் பயனர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதற்கு ஏதுவாக இருந்த ஒரு பாதிப்பைக் கண்டறிந்து கூறியதற்காக லக்ஷ்மன் முத்தையா எனும் இந்திய ஆராய்ச்சியாளருக்கு இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.
முத்தையா வழங்கிய விளக்கத்தின்படி, இந்த பாதிப்பு எந்தவொரு மைக்ரோசாப்ட் கணக்கையும் அனுமதியின்றி யாரை வேண்டுமானாலும் பயனப்டுத்த அனுமதித்திருக்கக்கூடும்.
முத்தையா பாதிப்புகளைக் கண்டறிந்து தெரிவிப்பது இதுவே முதல் முறை எல்லாம் இல்லை. இதற்கு முன்னரே இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்த பிழையைக் கண்டறிந்து கூறியும் அவர் 30000 டாலர்கள் வெகுமதி பெற்றுள்ளார்.
இதையடுத்து தான் இப்போது மைக்ரோசாஃப்ட் கணக்கிலும் ஒரு பாதிப்பை அவர் கண்டறிந்தார். பிழையைக் கண்டறிந்ததும், உடனடியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கும் தெரிவித்தார்.
மைக்ரோசாப்ட் இந்த சிக்கல் குறித்து புகாரளித்தவுடன் அதை விரைவாக ஒப்புக் கொண்டு அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கியது என்றும் முத்தையா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 50,000 டாலர்கள் வெகுமதியாக மைக்ரோசாப்டின் ஹேக்கர்ஒன் பிழை பவுண்டி திட்டத்தின் மூலம் லக்ஸ்மணுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிழைகள் புகாரளிக்கும் நபர்களுக்கு மைக்ரோசாப்ட், $1,500 முதல், $100,000 வரை பணத்தை வழங்குகிறது மற்றும் வெகுமதி பணம் இந்த பிழைகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை அடிப்படையாகக் கொண்டது.
பெரும்பாலான பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பக் பவுண்டி திட்டம் என்ற ஒன்றைக் கொண்டுள்ளன, இதன் மூலம் பிழைகள் மற்றும் பாதிப்புகளைக் கண்டறிபவர்களுக்கு வெகுமதிகளை வழங்குகின்றன.
0
0