தங்க மங்கை அவனி லேகாராவுக்கு ஆனந்த் மஹிந்திரா பரிசு! முழு விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
30 August 2021, 4:55 pm
Anand Mahindra wants specially-designed SUV dedicated to Avani Lekhara
Quick Share

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2021 துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் பாரா ஷூட்டர் அவனி லேகாராவுக்கு பரிசாக, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட SUV ஒன்றை வழங்கவிருப்பதாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். 

19 வயதான பாரா ஷூட்டர் இன்று காலை R-2 மகளிர் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் தங்கம் வென்றார், 2016 ரியோ கேம்ஸில் தங்கப் பதக்கம் வென்ற சீனாவின் கியூப்பிங் ஜாங் மற்றும் உக்ரைனின் உலக சேம்பியன் இரினா ஷ்செட்னிக்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளார்.

இதையடுத்து, ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மஹிந்திராவின் உலகளாவிய தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவரான வேலுசாமி அவர்களிடம், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கச் சொல்லியிருந்த SUV ஐ அவனி லேகாராவுக்கு ஏற்றவாறு தயார் பரிசாக வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். வேலுசாமி அவர்கள் சமீபத்திய மஹிந்திரா வாகனமான XUV700 SUV- ஐ உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் XUV700 SUV மாடலை சமீபத்தில் ரூ.11.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. எஸ்யூவி ஐந்து மற்றும் ஏழு இருக்கைகள் கொண்ட தளவமைப்புகளிலும், மேனுவல் மற்றும் AT மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் விருப்பங்களுடனும் வழங்கப்படுகிறது. 

2021 XUV700 மாடலனது XUV500 காரின் வாரிசாக புதிய உடல் வடிவமைப்பு, பல புதிய அம்சங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல மேம்பாடுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்காசார் முதல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் பல முன்னணி கார்களுக்கு எதிராக போட்டியிடுகிறது.

இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் டோக்கியோ பாராலிம்பிக்கில் வெற்றி பெரும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பான முறையில் ஆதரவளித்து வரும் இந்திய கார் தயாரிப்பாளர்களில் மஹிந்திரா நிறுவனமும் முக்கியமான ஒன்று. 

2021 ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு ஒரே தங்கப் பதக்கத்தை வென்று தந்த நீரஜ் சோப்ராவை பாராட்டும் விதமாக கார் தயாரிப்பாளர் பரிசை வழங்குவதாக அறிவித்ததை அடுத்து இப்போது அவனி லேகாராவுக்கும் மஹிந்திரா பரிசை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Views: - 320

0

0