உங்க ஆன்ட்ராய்டு போன்லயும் ஆப்ஸ் சரியா வேலைச் செய்யலயா? உடனே இதை பண்ணுங்க

Author: Dhivagar
23 March 2021, 11:22 am
Android apps crashing for some users, Google working on a fix
Quick Share

சில சாம்சங் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அவர்களின் போனில் உள்ள ஆப்கள் சரியாக வேலைச் செய்யாமல் செயலிழப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. ரெடிட் தளத்தில் வெளியான புகார்களின் படி, வெவ்வேறு சாம்சங் தொலைபேசிகளில் இந்த சிக்கல் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆப் செயலிழப்புகளுக்கு காரணம் வலை உள்ளடக்கத்தைக் காண்பிக்கப் பயன்படும் Android System WebView இல் உள்ள சிக்கல் தான் என்று கூறப்படுகிறது.

கேலக்ஸி S21, கேலக்ஸி A50, கேலக்ஸி S8, கேலக்ஸி A71, நோட் 20 அல்ட்ரா உள்ளிட்ட சாம்சங் ஸ்மார்ட்போன்கள் இந்த சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் அமேசான், ஜிமெயில் மற்றும் கூகிள் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகள் செயலிழப்பதாக தெரிவித்துள்ளனர். 

ஹவாய், கூகிள் பிக்சல் மற்றும் மோட்டோரோலா உள்ளிட்ட பிற பிராண்டுகளின் சில தொலைபேசிகளும் இதே செயலிழக்கும் சிக்கலை எதிர்கொள்கின்றன. இந்த சிக்கல் பழைய மற்றும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் என அனைத்தையுமே பாதிப்பதாகவும் கூறப்படுகிறது.

கூகிள் நிறுவனமும் இது போன்ற சிக்கல் இருப்பதை அறிந்து அதற்கான தீர்வைக் காண தெடர்ந்து வேலைச் செய்து வருகிறது. கூகிள் ஒரு தீர்வை உருவாக்கும் வரை, பாதிக்கப்பட்ட பயனர்கள் வெப் வியூ புதுப்பிப்பை அகற்றி தொலைபேசியை Restart செய்வதன் மூலம் இந்த பிரச்சினை இல்லாமல் இருக்கலாம். அதற்கான வழிமுறை இதோ:

  • Settings மெனுவைத் திறந்து, Apps என்பதற்குச் செல்லவும்.
  • கீழே scroll செய்து Android System WebView என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • பின்னர் மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் கொண்ட பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  • ‘Uninstall Updates’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Settings மெனுவிலிருந்து புதுப்பிப்புகளை Uninstall செய்வது சில பயன்பாடுகளை மட்டுமே சரிசெய்கிறது என்றும் ரெடிட்டில் உள்ள சில பயனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எல்லா பயன்பாடுகளும் சரியாக இயங்க Google Play Store இலிருந்து பயன்பாட்டு புதுப்பிப்புகளை Uninstall செய்ய அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைச் செய்ய பயனர்கள் Play Store க்குச் சென்று, Android System WebView என்பதைத் தேடி Uninstall எனும் ஆப்ஷனைப் பிரெஸ் செய்யவும். அவ்வளவுதான். இப்போது, உங்கள் போன் எப்போதும் போல வேலைச் செய்யும் என்று நம்புகிறோம்.

Views: - 123

0

0