ரூ.29,990 தொடக்க விலையில் புதிய ஐபாட், ஐபாட் ஏர் சாதனங்கள் அறிமுகம் | புதிதாக என்னென்ன அம்சங்கள் இருக்கு?
16 September 2020, 9:19 amஆப்பிள் செவ்வாயன்று தனது ‘டைம் ஃப்ளைஸ்’ நிகழ்வை நடத்தியது, அதில் நிறுவனம் 8 வது தலைமுறை ஐபாட் சாதனத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதன் ஐபாட் வரிசையை புதுப்பித்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 8 வது தலைமுறை ஐபாட் ஆனது கடந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபாட்-க்கு மாற்றாக வந்துள்ளது.
அம்சங்களைப் பொறுத்தவரை, 8 வது தலைமுறை ஐபாட் ஏர் 10.2 அங்குல ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது நியூரல் இன்ஜினுடன் இணைந்து A12 பயோனிக் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. எட்டாவது தலைமுறை ஐபாட் அதிக விற்பனையான விண்டோஸ் லேப்டாப்பை விட இரண்டு மடங்கு வேகமாகவும், அதிக விற்பனையான ஆண்ட்ராய்டு டேப்லெட்டை விட மூன்று மடங்கு வேகமாகவும், அதிக விற்பனையான Chromebook ஐ விட ஆறு மடங்கு வேகமாகவும் இருப்பதாக ஆப்பிள் கூறுகிறது.
புதிய ஆப்பிள் ஐபாட்
8 வது தலைமுறை ஐபாட் iOS 14 இல் இயங்குகிறது மற்றும் இது ஆப்பிள் பென்சிலுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. ஆப்பிள் செப்டம்பர் 16 முதல் ஐபாட் OS 14 ஐ அதன் அனைத்து ஐபாட்களிலும் வெளியிடத் தொடங்கும்.
விலை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொருத்தவரை, 8 வது தலைமுறை ஐபாட் வைஃபை மாடலுக்கு, ரூ.29,900 விலையும் மற்றும் வைஃபை + செல்லுலார் மாடலுக்கு ரூ.41,900 ஆரம்ப விலையும் கொண்டுள்ளது. இது சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் கோல்ட் கலர் வகைகளிலும், 32 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி வகைகளிலும் விரைவில் இந்தியாவில் கிடைக்கும்.
புதிய ஆப்பிள் ஐபாட் ஏர்
8 வது தலைமுறை ஐபாட் சாதனத்தை அறிமுகப்படுத்தப்படுவதைத் தவிர, ஆப்பிள் புதிய ஐபாட் ஏர் மாடலையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இது 10.9 இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆப்பிளின் A14 பயோனிக் சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. Home பட்டனின் வலதுபுறம் TouchID பதிக்கப்பட்டுள்ளது மற்றும் 12 MP ஃபேஸ்டைம் கேமரா கொண்டுள்ளது. இது ஐபாட் OS 14 இல் இயங்குகிறது.
புதிய ஐபாட் ஏர் வைஃபை மட்டும் கொண்ட மாறுபாட்டிற்கு, ரூ.54,900 மற்றும் வைஃபை + செல்லுலார் மாறுபாட்டிற்கு ரூ.66,900 என்ற ஆரம்ப விலையில் வருகிறது. இது இந்தியாவில் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வகைகளிலும், சில்வர், ஸ்பேஸ் கிரே, ரோஸ் கோல்ட், க்ரீன் மற்றும் ஸ்கை ப்ளூ கலர் வகைகளிலும் இந்த ஆண்டு அக்டோபர் முதல் கிடைக்கும்.
இதர அறிமுகங்கள்
இரண்டு புதிய ஐபாட் மாடல்களைத் தவிர, ஆப்பிள் தனது ஐபாடிற்கான புதிய உபகரணங்கள் சிலவற்றையும் அறிவித்துள்ளது. இரண்டாவது தலைமுறை ஆப்பிள் பென்சிலின் விலை, ரூ.10,900, மேஜிக் கீபோர்டு மற்றும் ஐபாட் ஏருக்கான ஸ்மார்ட் கீபோர்டு ஃபோலியோ முறையே ரூ.27,900 மற்றும் ரூ.15,900 விலையில் கிடைக்கின்றன. கடைசியாக, ஐபாட் ஏருக்கான ஸ்மார்ட் ஃபோலியோஸ் ரூ.7,500 விலையில் கருப்பு, வெள்ளை, டீப் நேவி, சைப்ரஸ் கிரீன் மற்றும் பிங்க் சிட்ரஸ் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.