ஆப்பிளின் புத்தம் புதிய 13 அங்குல மேக்புக் ப்ரோ அறிமுகம் | அம்சங்கள் & விலை விவரங்கள்

11 November 2020, 12:21 pm
Apple Announces New 13-inch MacBook Pro with Apple M1 Chip
Quick Share

புதிய மேக்புக் ஏர் உடன், ஆப்பிள் இன்று ஆப்பிள் M1 சிலிக்கான் சிப் உடன் மேக்புக் ப்ரோ சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இது மேக்புக் ஏர் சாதனத்தில் இருந்ததைப் போலவே, புதிய மேக்புக் ப்ரோவும் முந்தைய தலைமுறை சாதனத்தைப் போலவே தோற்றமளிக்கிறது, மேலும் அதே 13 அங்குல ரெடினா டிஸ்ப்ளேவுடன் வருகிறது, ஆனால் ஹூட்டின் கீழ் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த தலைமுறை மேக்புக் ப்ரோவுடன் ஒப்பிடும்போது M1 செயலி CPU செயல்திறனைப் பொறுத்தவரை 2.8 மடங்கு வேகமாகவும், GPU செயல்திறனில் 5 மடங்கு வேகமாகவும் செயல்படுகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. 

மேலும், புதிய மேக்புக் ப்ரோ ஒரு ஃபிரேம் கூட விடாமல் டாவின்சி ரிஸால்வில் 8K ProRes காட்சிகளை இயக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.

அதனுடன், நீங்கள் மேக்புக் ப்ரோவை 16 ஜிபி ரேம் மற்றும் 2 TB வரையிலான SSD உடன் வாங்க முடியும்.

இந்த மடிக்கணினி முந்தைய தலைமுறை மேக்புக் ப்ரோவில் இருந்ததைப் போலவே அதே தண்டர்போல்ட் போர்ட்களுடன் வருகிறது, இந்த நேரத்தில் யூ.எஸ்.பி 4 ஆதரவும், ஸ்டுடியோ தரம் வாய்ந்த மூன்று மைக் வரிசையைக் கொண்டுள்ளது.

மேக்புக் ஏரில் இருந்ததைப் போலவே, ஃபேஸ்டைம் HD கேமராவும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த சத்தம் குறைப்பு, அதிக டைனமிக் வரம்பு மற்றும் முகம் கண்டறிதல் போன்ற அம்சங்கள் கிடைக்கும்.

பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, புதிய M1 சிப் மூலம் மேம்பாடுகள் உள்ளன. மேக்புக் ப்ரோ 17 மணிநேர வலை உலாவலையும் 20 மணிநேர வீடியோ பிளேபேக்கையும் வழங்குவதாக ஆப்பிள் கூறுகிறது. முந்தைய தலைமுறை மேக்புக் ப்ரோவுக்காகக் கோரப்பட்ட பேட்டரி ஆயுளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறப்பானதாக தோன்றுகிறது.

M1 செயலியுடன் புதிய மேக்புக் ப்ரோ விலை $1299 ஆகும், ஆனால் கல்வி பயனர்கள் அதை $1199 க்கு பெறலாம். மடிக்கணினியை இப்போதே முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம், மேலும் இது இந்த வியாழக்கிழமை முதல் விற்பனைக்கு வரும்.

Views: - 30

0

0