செப்டம்பரில் அறிமுகமாகிறது ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் | எதிர்பார்க்கப்படும் விலை & விவரங்கள்

3 April 2021, 6:05 pm
Apple iPhone 13 series expected to launch in September
Quick Share

ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 சீரிஸை வரும் மாதங்களில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்போது, இந்த ஐபோன்கள் குறித்த சில தகவல்கள் வதந்திகளாக வெளியாகியுள்ளது. இந்த சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் ஐபோன் 12 மாடலை ஒத்ததாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், வரவிருக்கும் ஐபோன் 13 தொடரில் சில மாற்றங்கள் உள்ளன, இதில் சிறிய நாட்ச் வடிவமைப்பு, டிஸ்பிளேவில் கைரேகை ஸ்கேனர் மற்றும் போர்ட்டலெஸ் சார்ஜிங் ஆகியவை இருக்கும்.

விலையைப் பொறுத்தவரை, ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸின் ஆரம்ப விலை ரூ.69,990 ஆகவும் மற்றும் அதன் டாப்-எண்ட் மாடல் ரூ.1,49,990 விலையுடனும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு அமைப்பில் வழக்கமான அம்சமாக இருந்துவரும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனரைக் கொண்ட முதல் வகை ஐபோன் 13 இதுவாக இருக்குமென்று வதந்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனில் A15 பயோனிக் சிப், டச் மற்றும் ஃபேஸ் ID, அதிக புதுப்பிப்பு வீதம், பெரிய பேட்டரிகள், 1 TB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் பலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸ் எஃப் / 1.8 லென்ஸுடன் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் லென்ஸைக் கொண்டிருக்கும் என்று ஆய்வாளர் மிங்-சி குவோ தெரிவித்துள்ளார், புரோ மாடல்களுக்கு மட்டுமே புதிய கேமராக்கள் உடன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த புதிய எஃப் / 1.8 லென்ஸ் லென்ஸுக்குள் அதிக வெளிச்சத்தை அனுமதிக்கும், இதன் விளைவாக ஒட்டுமொத்த மிருதுவான படம் கிடைக்கும்.

மற்றொரு அறிக்கை ஐபோன் 13 மாடல்களுக்கு LiDAR சென்சார் கிடைக்கும் என்று தெரிவிக்கிறது, ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை

செப்டம்பரில் அறிமுகம் செய்யப்படும் மாடல்களில் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, 13 புரோ மற்றும் 13 புரோ மேக்ஸ் ஆகியவை அடங்கும்.

Views: - 0

0

0

Leave a Reply