ஃபிஸ்கர் உடன் இணைந்து கைகோர்த்தது ஃபாக்ஸ்கான்! சுவாரசியமான தகவல்கள் இதோ

25 February 2021, 6:14 pm
Apple supplier Foxconn teams up with Fisker to make electric vehicles
Quick Share

எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரான ஃபிஸ்கர் நிறுவனத்துடன், ஆப்பிள் நிறுவனத்தின் விநியோகஸ்தரான ஃபாக்ஸ்கான் இணைந்து 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து ஆண்டுக்கு 250,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்பதிவு வர்த்தகத்தில் பிஸ்கரின் பங்குகள் 23.4% உயர்ந்து 20.10 டாலராக இருந்தது.

“ப்ராஜெக்ட் PEAR” (தனிநபர் மின்சார தானியங்கி புரட்சி) என்ற குறியீட்டு பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம், வட அமெரிக்கா, ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகளவில்  பல சந்தைகளைக் குறி வைக்கிறது என்று பிஸ்கர் தெரிவித்துள்ளது.

ஆப்பிளின் முக்கிய ஐபோன் தயாரிப்பாளரான ஃபாக்ஸ்கான், கடந்த ஆண்டு முதல் மின்சார வாகனங்கள் (EV) உற்பத்தி மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.  அதையடுத்து சீன மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான பைடன் மற்றும் வாகன உற்பத்தியாளர் ஆன ஜெஜியாங் ஜீலி ஹோல்டிங் குழுமம் போன்றவற்றுடன் ஒப்பந்தங்களையும் அறிவித்துள்ளது.

2025-2027 க்குள் உலகின் 10% மின்சார வாகனங்களுக்கு உபகரணங்கள் அல்லது சேவைகளை வழங்குவதை ஃபாக்ஸ்கான் நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் எதிர்கால ஒத்துழைப்புக்காக பல கார் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தலைவர் லியு யங்-வே அக்டோபரில் தெரிவித்தார்.

Views: - 1

0

0