ஆப்பிளின் ஐபோன் SE 2022: வெளியானது புதிய தகவல்!
3 April 2021, 12:34 pmஆப்பிள் கடந்த ஆண்டு ஐபோன் SE 2020 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, மேலும் அடுத்த சில ஆண்டுகளுக்கு தொடர்ந்து இதன் அடுத்தடுத்த பதிப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் வரவிருக்கும் ஐபோன் SE 2022 மாடல் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
ட்விட்டர் பயனர் Ross Young என்பவர் பகிர்ந்த ட்வீட்டின் படி, ஐபோன் 2022 4.7 இன்ச் LCD டிஸ்ப்ளேவுடன் வரப்போகிறது, அதே நேரத்தில் 2023 மாடல் 6.1 இன்ச் திரை உடன் இன்னும் சற்று பெரியதாக இருக்கும். ஐபோன் SE யின் 2023 பதிப்பில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இருக்கப் போகிறது என்றும் யங் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலின் மூலம், ஆப்பிள் ஐபோன் SE 2022 மாடலுக்கான காம்பாக்ட் 4.7 இன்ச் திரை அமைப்பைத் தக்க வைத்துக் கொள்ளப் போகிறது என்பது தெரிகிறது. அதே போல், அடுத்த ஆண்டு ஆப்பிள் அறிமுகப்படுத்தவிருக்கும் ஸ்மார்ட்போன் 5ஜி இணைப்பு வசதியைக் கொண்டதாக இருக்கும் என்று யங் தனது ட்வீட்டில் மேலும் தெரிவித்தார்.
இப்போதைக்கு, சமீபத்திய ஐபோன் 12 தொடர் சாதனங்கள் மட்டுமே 5ஜி ஆதரவுடன் வருகின்றது. ஐபோன் SE 2022 sub-6GHz ஆதரவுடன் வரக்கூடும்.
6.1 இன்ச் பெரிய திரையை விட, ஐபோன் SE 2023 ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும், இது இதுவரை அனைத்து ஆப்பிள் ஸ்மார்ட்போன்களிலும் நாம் பார்த்ததை விட மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இவை அனைத்தும் சிறப்பான ஒரு அம்சங்களாக தெரிந்தாலும், இப்போதைக்கு இவை அனைத்தும் வெறும் ஊகமாகவே பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வ தகவல் வரும் வரை நாம் எதையும் உறுதியாக நம்பிவிட முடியாது.
0
0