ரூ.99,990 முதல் ஆசஸ் ஜென்புக் டியோ 14, புரோ டியோ 15 OLED லேப்டாப்கள் அறிமுகம்! விவரங்கள் இங்கே

14 April 2021, 4:34 pm
Asus launches ZenBook Duo 14, Pro Duo 15 OLED laptops with dual screens
Quick Share

ஆசஸ் தனது ஜென்புக் தொடரில் இரண்டு புதிய மடிக்கணினிகளை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆசஸ் நிறுவனம் இரட்டை திரை ஜென்புக் டியோ 14 மற்றும் ஜென்புக் புரோ டியோ 15 OLED லேப்டாப் ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 

நிறுவனத்தின் உயர்நிலை மற்றும் பிரீமியம் மடிக்கணினிகள் பிரிவில் இவை சேர்வதால், ஜென்புக் டியோ 14 இன் அடிப்படை மாடலுக்கு, ரூ.99,990 விலையும், ஜென்புக் புரோ டியோ 15 OLED இன் அடிப்படை மாறுபாட்டிற்கு ரூ.2,39,990 விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அமேசான், பிளிப்கார்ட், ஆசஸ் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர்ஸ் மற்றும் க்ரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் பல ஆஃப்லைன் கூட்டாளர்கள் வழியாக இன்று முதல் இவற்றை நீங்கள் பெற முடியும். அதிக விலை கொண்ட ஜென்புக் லேப்டாப் மே மாத நடுப்பகுதியில் அதன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் வழியாக கிடைக்கும்.

இந்த இரண்டு மடிக்கணினிகளிலும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்றால் இரண்டாம் நிலை திரை தான். இதனை ஆசஸ் ‘ஸ்கிரீன் பேட் பிளஸ்’ என்று அழைக்கிறது. ஸ்கிரீன் பேட் பிளஸ் டிசைனை முந்தைய மாடல்களுடன் ஒப்பிடும்போது, ​​இவை மெலிதானவை, மேலும் கொஞ்சம் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும்போது பாதுகப்பாக இருப்பதற்கான சில அம்சங்களைக் கொண்டுள்ளன. 

சிறந்த டைப் மற்றும் பார்வை அனுபவத்திற்காக அதிக கோணத்தைக் கொண்டுவருவதற்காக புதிய எர்கோலிஃப்ட் AAS பிளஸ் (ஆக்டிவ் ஏரோடைனமிக் சிஸ்டம்) ஹின்ஜ் வடிவமைப்பையும் சேர்த்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது, அதே நேரத்தில் வெப்பத்தை திறம்பட வெளியேற்றும்.

  • தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, ​​மிகவும் சக்திவாய்ந்த ஜென்புக் புரோ டியோ 15 OLED (UX582LR) இன்டெல் 10-ஜென் கோர் i7 மற்றும் i9 SoC களின் அடிப்படையில் இரண்டு வகைகளில் வருகிறது. 
  • இது 15.6 அங்குல OLED 4K டச் டிஸ்ப்ளே 178 டிகிரி கோணத்துடன், 100% DCI-P3 வண்ண வரம்பு கவரேஜ், 440 நைட்ஸ் பிரகாசம் மற்றும் 0.2ms மறுமொழியைக் கொண்டுள்ளது. 
  • TÜV ரைன்லேண்ட் கண் பராமரிப்பு சான்றிதழ் மற்றும் PANTONE சரிபார்க்கப்பட்ட குழு ஆகியவை உள்ளன. 
  • ஸ்கிரீன் பேட்+ 14.1 இன்ச் 4K IPS பேனலால் ஆனது, இது ஸ்டைலஸை ஆதரிக்கிறது மற்றும் துல்லியமான வேலைக்கு உங்கள் ஸ்டைலஸ் pad ஆகவும் செயல்பட முடியும். இது 400 நைட்ஸ் அதிகபட்ச பிரகாசம் மற்றும் 100% sRGB வண்ண வரம்பு கவரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
  • இந்த விண்டோஸ் 10 சாதனத்தில் NVIDIA GeForce MX450 GPU 8 ஜிபி DDR 6 பிரத்யேக ரேம் கிராபிக்ஸ் உடன் கிடைக்கிறது, கூடுதலாக 32 ஜிபி DDR4 ரேம் மற்றும் 1 டிபி M.2 NVME PCIe SSD 3.0 X 4 SSD ஆகியவையும் உள்ளது. டூயல்-பேண்ட் வைஃபை 6 + ப்ளூடூத் 5.0 மற்றும் HD அகச்சிவப்பு வெப்கேம் ஆகியவையும் உள்ளது. 
  • போர்ட்களைப் பொறுத்தவரை, ஜென்புக் புரோ டியோ 15 OLED 2x தண்டர்போல்ட் 3 யூ.எஸ்.பி-C, யூ.எஸ்.பி 3.2 ஜெனரல் 2 டைப்-A, HDMI 2.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்.டி ரீடர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 
  • ஆடியோ ஹர்மன் கார்டன் சான்றளிக்கப்பட்டது. இந்த சக்திவாய்ந்த சாதனத்தில் 92Whr பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

Views: - 45

0

0