ஆசஸ் ஜென்ஃபோன் 7 சீரிஸ் போனின் வெளியீட்டு தேதி உறுதியானது!! செம குஷியில் ஆசஸ் ரசிகர்கள்! முழு விவரம் அறிக
18 August 2020, 9:58 amமிக நீண்ட காலமாக, ஆசஸ் அதன் சுழலும் செல்பி கேமரா தொலைபேசியான ஜென்ஃபோன் 7 தொடரின் அடுத்தப் பதிப்பிற்கான வெளியீட்டு தேதியை அறிவிக்க ஆசஸ் ரசிகர்கள் காத்திருக்கிறோம். தைவானிய நிறுவனம் இன்னும் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளவில்லை, ஆனால் அது ஒரு சரியான நேரத்தில் வெளியாகப்போவதாகத் தெரிகிறது. ஆசஸ் ஜென்ஃபோன் 7 தொடர் ஆகஸ்ட் 26 ஆம் தேதி தைவானில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும்.
ஆசஸ் தைவானின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் திட்டமிடப்பட்ட நிகழ்வு வீடியோ மூலம் வெளியீட்டு தேதியை (Twitter/yabhishekhd) வெளியிட்டது. ஸ்னாப்டிராகன் 865 ஆல் இயங்கும் ஜென்ஃபோன் 7 மற்றும் புதிய ஓவர்லாக் செய்யப்பட்ட ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் மூலம் இயக்கப்படும் ஜென்ஃபோன் 7 ப்ரோ ஆகியவை அடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஜென்ஃபோன் 7 தொடர் ஆகஸ்ட் 26 அன்று பிற்பகல் 2:00 மணிக்கு (GMT + 8) அல்லது 11:30 AM IST மணிக்கு அறிமுகமாகும்.
மேலே உள்ள வீடியோ இரண்டு ஜென்ஃபோன் 7 வகைகள் இருப்பதை உறுதிப்படுத்துகிறது, ஆனால் ஆசஸின் வரவிருக்கும் முதன்மை தொலைபேசிகளைப் பற்றி அதிகம் தெரியவில்லை. இரண்டு தொலைபேசிகளும் சமீபத்தில் புளூடூத் SIG சான்றிதழைப் பெற்றது. அவற்றின் மாடல் எண்கள் ZS670KS மற்றும் ZS671KS ஆகும். அதன் வடிவமைப்பு அல்லது முக்கிய அம்சங்களைப் பற்றி இன்னும் எதுவும் தெரியவில்லை.
ஜென்ஃபோன் 7 அதன் முந்தைய பதிப்பு, இந்தியாவில் ஆசஸ் 6Z (உலகளவில் ஜென்ஃபோன் 6 என அழைக்கப்படுகிறது) போனில் காணப்படும் ஃபிளிப் கேமராவை தக்க வைத்துக் கொள்வதாக வதந்தி பரவியுள்ளது. இது ஒரு பெரிய 6.7 இன்ச் டிஸ்ப்ளே, பிரமாண்டமான 5,000 mAh பேட்டரி மற்றும் பின்புறத்தில் மல்டி கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வீடியோ சிறுபடம் ஒரு குவாட்-கேமரா அமைப்பையும் கொண்டிருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கிறது.
ஜென்ஃபோன் 7 தொடரின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் மேலாக உள்ளது, எனவே துவக்கத்திற்கு முந்தைய நாட்களில் ஆசஸ் அதிக டீஸர்களைக் வெளியிட்டு புதிய விவரங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். புதுமையான ஃபிளிப் கேமரா பொறிமுறைக்கு அடுத்ததாக நிறுவனம் நமக்காக என்ன அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஜென்ஃபோன் 7 தொடரிலிருந்து உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன? கீழேயுள்ள கருத்துகளில் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள்.