பேஸ்புக்கிற்கு பெரிய ஆப்பு வைத்தது ஆஸ்திரேலியா! உருவானது ராயல்டி வழங்கும் சட்டம்

25 February 2021, 3:27 pm
Australia passes new law requiring Facebook and Google to pay for news
Quick Share

நீண்ட காலமாக ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக ஊடக நிறுவனங்கள், ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே நடந்துவந்த கடுமையான பனிப்போர் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில், பேஸ்புக் தளத்தில் செய்திகள் எதுவும் வராதவாறு முடக்கி வைத்திருந்த பேஸ்புக், சில நாட்களுக்கு முன்பு அதை அகற்றி செய்தி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் முடிவுக்கு  வந்துள்ளது.

ஏற்கனவே மிகப்பெரிய நிறுவனமான கூகிள், நியூஸ் கார்ப் மற்றும் நைன் என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள நிலையில், இப்போது பேஸ்புக் நிறுவனமும் செவன் வெஸ்ட் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டுள்ளது. அடுத்த வரும் மூன்று ஆண்டு காலத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வரும் செய்திகளை செய்தி நிறுவனத்திடமிருந்து வாங்க சுமார் ரூ.7,230 கோடி செலவிட உள்ளதாகவும் அந்நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த சலசலப்புகள் எல்லாம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க, ஆஸ்திரேலியா அரசாங்கம் ஒரு புது  சட்டம் ஒன்றை விதித்துள்ளது. அதன்படி, கூகிள் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளுக்கு அதன் உரிமை நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய சட்டத்திற்கு ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

இன்று எல்லாம் ஆன்லைன் மயம் தான். சாப்பிடும் உணவு முதல் கால்களுக்குத் தேவைப்படும் காலணி வரை எல்லாவற்றுக்குமே ஆன்லைன் தளங்கள் தான் ஆரம்ப புள்ளியாக உள்ளன. ஆம், ஏதேனும்  ஒரு பொருளை  வாங்கலாமா வேண்டாமா என்றால் அதற்கான பரிந்துரையையும் நாம் சமூக வலைத்தளங்களில் தான் பார்க்கிறோம். ஏன், இன்னும் சொல்லப்போனால் நாம் வேலைகளை கூட இப்போது ஆன்லைனில் தான் தேடுகிறோம். இதனால் ஆன்லைன் தளங்கள் விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகின்றன.

பெரும்பாலான மக்கள் செய்திகளையும் ஆன்லைனில் அதாவது ககிள் அல்லது பேஸ்புக் போன்றவற்றில் பகிரப்படும் இணைப்புகள் மூலம் தான் படிக்கின்றனர். இதனால் ஊடக நிறுவனங்கள் தலங்களுக்கு வருவாயில் இழப்பு ஏற்படுவதாக குற்றம்  சாட்டப்பட்டது. இதையடுத்து நீண்ட நாட்களாக நிகழந்து வந்த பிரச்சினைக்கு இப்போது இயற்றப்பட்ட News Media and Digital Platforms Mandatory Bargaining Code என்ற என்ற புதிய சட்டத்தின் மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது. இதையடுத்து  ஆஸ்திரேலிய ஊடகங்கள் மூலம் பெறப்படும் செய்திகளுக்கு அதை பயன்படுத்த சமூக ஊடகங்கள் ராயல்டி வழங்க வேண்டும்.

ஆரம்பத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையில் பேஸ்புக் செயல்பட்டது. பின்னர், ஆஸ்திரேலிய அரசாங்கம் தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததை அடுத்து ஆஸ்திரேலிய செய்தி ஊடங்கங்களுக்கு சாதகமாக  இந்த  சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகளவில் இது போன்ற  ஒரு சட்டம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். 

Views: - 20

0

0