நிலவில் ஆக்சிஜன் இருப்பை கண்டுபிடிக்க NASAவிற்கு உதவும் ஆஸ்திரேலியா!!!

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 6:34 pm
Quick Share

2026 ஆம் ஆண்டிற்குள் சந்திரனில் ஆக்ஸிஜன் உள்ளதா இல்லையா என்பதை கண்டுபிடிப்பதற்காக 20 கிலோகிராம் செமி ஆட்டோனாமஸ் லூனார் ரோவரை உருவாக்க ஆஸ்திரேலியா ஒப்புக் கொண்டுள்ளது.

ரோவர் சந்திரனில் உள்ள ஆக்சைடுகளைக் கொண்ட மண்ணைச் சேகரிக்கும் மற்றும் NASA அந்த மண்ணிலிருந்து ஆக்ஸிஜனைப் பிரித்தெடுக்க தனி உபகரணங்களைப் பயன்படுத்தும் என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது. சந்திர மேற்பரப்பில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆக்ஸிஜன் இறுதியில் நிலவில் மனித இருப்பை தக்கவைக்க மற்றும் செவ்வாய் கிரகத்திற்கான எதிர்கால பயணங்களை ஆதரிக்க பயன்படும்.

ஆஸ்திரேலியாவின் வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள சுரங்கங்களில் இருந்து இரும்புத் தாதுக்களைக் கொண்டு செல்லும் பெரிய டம்ப் லாரிகளை 1,600 கிலோமீட்டர் தொலைவில் இருந்தே கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தால் NASA ஈர்க்கப்பட்டதாக ஆஸ்திரேலிய விண்வெளி முகமை துணைத் தலைவர் அந்தோனி முர்பெட் கூறினார்.

NASA நிர்வாகி பில் நெல்சன் கூறுகையில், இந்த ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுடனான உறவை 50 ஆண்டுகளுக்கும் மேலான விண்வெளி ஆய்வுடன் வலுப்படுத்தும். இந்த
ஒப்பந்தம் அதன் வளர்ச்சியின் போது பல்வேறு நிபந்தனைகளை பூர்த்தி செய்வதைப் பொறுத்தது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 193

0

0

Leave a Reply