விண்ணை எட்டிய எலோனின் வரலாறு புத்தகமாக விரைவில்! எழுதப்போவது யார் தெரியுமா?

Author: Dhivagar
5 August 2021, 1:25 pm
Author of Steve Jobs now writing biography of Elon Musk
Quick Share

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், ஐன்ஸ்டீன், பெஞ்சமின் ஃபிரான்க்ளின், லியொனார்டோ டா வின்சி ஆகியோரின் சுயசரிதை புத்தகங்களை இயற்றிய பிரபல கதாசிரியர் வால்டர் ஐசக்சன் அவர்கள் ஸ்பேஸ்X, டெஸ்லா நிறுவனங்களின் தலைவரான எலோன் மஸ்க் அவர்களின் சுயசரிதையை எழுதவுள்ளார். இந்த தகவலை எலோன் மஸ்க் அவர்களே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான ஐசக்சன் அவர்கள், டைம் இதழின் ஆசிரியராகவும், CNN நிறுவனத்தின் தலைவர் ஆகவும் மற்றும் ஆஸ்பென் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பதவி வகித்துளார். 2014 ஆம் ஆண்டில், மனிதநேய சாதனைக்காக அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தின் உயரிய விருதான ஜெபர்சன் லெக்ச்சர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராயல் சொசைட்டி ஆஃப் ஆர்ட்ஸில் ஒரு உறுப்பினராக இருந்தார். மேலும் 2013 இல் பெஞ்சமின் பிரான்க்ளின் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் டெஸ்லா கார்களை கொண்டுவர வேண்டும் என்று பிரபல யூடியூபர் மதன் கௌரி வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்து இந்திய ஊடங்கங்களின் தலைப்புச் செய்தி ஆனார். 

உலகெங்கிலும் பிரபலமான டெஸ்லா கார்களை இந்தியாவிலும் சீக்கிரமாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று பிரபல யூடியூபர் ஆன மதன் கௌரி ட்விட்டரில் டெஸ்லா நிறுவன தலைவரான எலோன் மஸ்க் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இந்தியாவில் வெற்றி அடைந்தால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை அமைக்க வாய்ப்புள்ளது என்று தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் முன்னதாக தெரிவித்திருந்தார். 

உலகில் இருக்கும் நாடுகளிலேயே அதிக இறக்குமதி வரி வசூலிக்கும் நாடு இந்தியா தான் என்று வேதனை தெரிவித்துள்ளார். அதோடு, தூய்மையான எரிசக்தி உடன் இயங்கும் வாகனங்களுக்கும் கூட பெட்ரோல் டீசல் கார்களைப் போல மிக அதிக அளவிலான வரி வசூலிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் மின்சார கார்களுக்காவது வரிச்சலுகை கிடைக்கும் என நம்புகிறோம் என்று எதிர்பார்ப்புடன் எலோன் பதிலளித்துள்ளார். 

இந்தியாவின் இறக்குமதி வரி குறித்து எலோன் மஸ்க் ஏற்கனவே பல முறை கருத்து தெரிவித்துள்ளார். தற்போதைய இறக்குமதி வரி நிலவரப்படி, $40000 விலைக்கும் குறைவாக இருக்கும் கார்களுக்கு 60% இறக்குமதி வரியும், $40000 மேல் விலை கொண்டிருக்கும் கார்களுக்கு 100% இறக்குமதி வரியும் வசூலிக்கப்படுகிறது. 

இறக்குமதி செய்வதற்கான கூட்டாட்சி வரிகளை 40% குறைத்தால் மட்டுமே இந்தியாவில் விற்பனை லாபகரமானதாக இருக்கும் என்று இந்திய அமைச்சர்கள் மற்றும் நிதி ஆயோக் ஆகியோருக்கு அளித்த கடிதத்தில் டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.

டெஸ்லா மாடல் 3 ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் மட்டுமே இப்போதைக்கு $40000 க்கும் குறைவான விலை கொண்டுள்ளது. மற்ற அனைத்து கார்களும் விலை உயர்ந்தவை. 

இது குறித்து கடந்த மார்ச் மாதம் கருத்து தெரிவித்த நிதின் கட்கரி, சீனாவில் இருப்பதை விட டெஸ்லாவின் உற்பத்தி செலவுகளை இந்தியாவில் குறைக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு உள்நாட்டிலேயே கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் டெஸ்லா தனது கார்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Views: - 246

0

0