பிளே ஸ்டோரில் இருக்கும் இந்த 21 செயலிகளை டவுன்லோடு செய்துவிடாதீர்கள்!

27 October 2020, 12:10 pm
Avast Warns of 21 New Adware Apps on Google Play Store
Quick Share

சைபர்-பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட், ப்ளே ஸ்டோரில் 21 ஆட்வேர் கேமிங் செயலிகளை கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. அவாஸ்ட் நிறுவனம் இது குறித்து ஏற்கனவே கூகிள் நிறுவனத்திடம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால், கூகிள் இன்னும் விசாரித்துக்கொண்டிருப்பதால் 19 தீங்கிழைக்கும் செயலிகள் இன்னும் தளத்தில் உள்ளன. இந்த புதிய தீம்பொருள் செயலிகள் கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிறுவனம் கண்டறிந்ததைப் போலவே, மறைக்கப்பட்ட விளம்பரங்களைக் கொண்டிருக்கும் தீங்கிழைக்கும் செயலிகளின் குடும்பத்தின் ஒரு பகுதியாகும்.

அறிக்கையின்படி, பயன்பாடுகள் ஊடுருவும் விளம்பரங்களைக் காண்பிக்கின்றன. மேலும், வழக்கமான கேம் ஆப்கள் போன்று தோற்றமளித்து பயனர்களை ஈர்க்கின்றன. ஆப் இன்டெலிஜென்ஸ் மற்றும் இன்சைட்ஸ் நிறுவனமான சென்சார் டவரின் மதிப்பீடுகளின்படி, பயன்பாடுகள் இதுவரை சுமார் எட்டு மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செயலிகள் பெரும்பாலும்  யூடியூபில் தான் விளம்பரம் செய்யப்படுகின்றன, ஏராளமானோர் பிளே ஸ்டோர் மதிப்புரைகளில் யூடியூப் வீடியோக்கள் மூலம் இந்த செயலிகளைப் பற்றி அறிந்ததாக கூறுகின்றனர்.

சரி பின்வரும் பட்டியலில் இருக்கும் செயலிகள் உங்கள் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் உடனியாக அதை அகற்றிவிடுங்கள்:

Shoot Them
Crush Car
Rolling Scroll
Helicopter Attack – NEW
Assassin Legend – 2020 NEW
Rugby Pass
Helicopter Shoot
Flying Skateboard
Iron it
Shooting Run
Plant Monster
Find Hidden
Find 5 Differences – 2020 NEW
Rotate Shape
Jump Jump
Find the Differences – Puzzle Game
Sway Man
Monkey Destroyer
Desert Against
Cream Trip
Props Rescue

Views: - 23

0

0