அட இவ்ளோ கம்மி விலையா! AVITA காஸ்மோஸ் 2-இன்-1 சீரிஸ் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்

17 May 2021, 10:52 pm
AVITA launches Cosmos 2-in-1 Series laptop in India
Quick Share

அமெரிக்காவை தளமாகக் கொண்ட லைஃப்ஸ்டைல் கேஜெட் பிராண்டான AVITA, இந்தியாவில் 2-இன்-1 காஸ்மோஸ் தொடரில் புத்தம் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய நுழைவு நிலை மடிக்கணினியின் விலை ரூ.17,990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சாம்பல் நிறத்தில் 2 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது.

காஸ்மோஸ் 2 இன் 1 தொடர் லேப்டாப்பை கற்றல் மற்றும் பொழுதுபோக்கு செயல்பாடுகளுக்கு ஒரு டேப்லெட் மற்றும் டெஸ்க்டாப் ஆக தனியே பிரிக்கக்கூடிய கீபோர்டு உடன் பயன்படுத்த முடியும்.

AVITA பிராண்டின் புத்தம் புதிய 2-இன்-1 சீரிஸ் 11.6 1920×1080 FHD IPS தொடுதிரையுடன் வருகிறது, இது அல்ட்ரா-வைடு பார்வைக் கோணத்தை வழங்குகிறது. பிரிக்கக்கூடிய கீபோர்டு உடன், COSMOS 11.6 2-in-1 ஒரு டேப்லெட்டிலிருந்து மடிக்கணினியாகவும் மாறுகிறது.

புதிய-ஜென் AVITA காஸ்மோஸ் விண்டோஸ் 10 ஹோம் உடன் 10 பாயிண்ட் டச் பேனலுடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 178 டிகிரி அகலமான கோணம், 2 MP முன் மற்றும் பின்புற கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக், மினி HDMI போர்ட், மைக்ரோ SD கார்டு ஸ்லாட், ப்ளூடூத் 4.0 ஆகியவற்றுடன் வருகிறது, இது குறிப்பாக சிக்கலான செயல்பாடுகள் மற்றும் காட்சி உள்ளடக்கங்களைக் கையாள பயனுள்ளதாக இருக்கும்.

Views: - 152

0

0