புதிய 2021 பஜாஜ் பல்சர் 180 பைக் அறிமுகம் | இந்த மாடலின் விலை எவ்ளோ தெரியுமா?

24 February 2021, 10:04 am
Bajaj Auto launches new 2021 Pulsar 180 at ₹1.07 lakh
Quick Share

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் 180 பைக்கை இந்திய சந்தையில் ரூ.1.07 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் மிகவும் பிரபலமான பைக், இப்போது புதுப்பிக்கப்பட்டு ஸ்டைலான பளபளப்பான கிராபிக்ஸ் மற்றும் சிறப்பான தோற்றத்துடன் பார்க்கவே அசத்தலாக இருக்கிறது.

ஆட்டோ ஹெட்லேம்ப் ஆன் (AHO) அமைப்புடன் புதிய பல்சர் 180 பைக் போல்டு டெக்கல்ஸ் மற்றும் ட்வின் பைலட் லைட்டுகளைக் கொண்டுள்ளது. இது ஸ்போர்ட்டி ஸ்ப்ளிட் சீட்ஸ், கருப்பு அலாய் வீல்ஸ் மற்றும் ஒரு ‘முடிவிலி’ LED வால் விளக்கு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் 178.6 சிசி, நான்கு-ஸ்ட்ரோக் SOHC 2-வால்வ் ஏர்-கூல்டு பிஎஸ் 6 DTS-ஐ ஃபை இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது 8500 rpm இல் 12.52 kW சக்தியையும் 6500 rpm இல் 14.52 Nm உச்ச திருப்புவிசையையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. முன் சஸ்பென்ஷனில் டெலெஸ்கோபிக் உராய்வு எதிர்ப்பு புஷ் (telescopic anti friction bush) உடன் ஐந்து வேக டிரான்ஸ்மிஷன் கியர் பெட்டியுடன் இந்த இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற சஸ்பென்ஷனில் ஐந்து வழி சரிசெய்யக்கூடிய நைட்ராக்ஸ் ஷாக் அபிசார்பரை இது கொண்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட பல்சர் 180 உடன், நிறுவனம் புதிய பாணி மற்றும் செயல்திறனுக்கான விருப்பங்களுடன் நவீன ஸ்போர்ட்ஸ் பைக் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களைப் பூர்த்தி செய்ய முயல்கிறது. தற்போது, ​​இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் பைக்கிங் பிரிவில் குறைந்தது 20 சதவிகிதம் வரை 180-200 சிசி மோட்டார் சைக்கிள்களே உள்ளது.

சமீபத்தில் ஜனவரி மாதத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை 16% அதிகரித்துள்ளது என்று அறிவித்திருந்தது. இந்நிறுவனம் கடந்த மாதம் 3,84,936 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதேபோல், முந்தைய ஆண்டின் ஏற்றுமதி 1,74,546 வாகனங்களாக இருந்தது, அதுவே கடந்த மாதம் மொத்தம் 2,27,532 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு நிறுவனத்தின் ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் 30% நேரடி வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

புதிய பல்சர் 180 பிஎஸ் 6 ஹோண்டா ஹார்னெட் 2.0, டிவிஎஸ் அப்பாச்சி RTR 180 மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R பிஎஸ் 6 போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும்.

Views: - 17

0

0