பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏப்ரல் மாத விற்பனை விவரங்கள் வெளியீடு

3 May 2021, 4:31 pm
Bajaj Auto sells 3,48,173 units in April 2021
Quick Share

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதத்திற்கான தனது விற்பனைத் தரவுகளை வெளியிட்டுள்ளது, இந்த மாதத்தில் உலகளவில் 3,48,173 யூனிட் விற்பனையை பதிவுச் செய்துள்ளது. இந்நிறுவனம் 2,21,603 யூனிட்டுகள் ஏற்றுமதியை பதிவுச் செய்துள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு விற்பனையில் 1,21,570 யூனிட்டுகளை விற்பனைச் செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஏற்றுமதி வருமானம் ரூ.12,687 கோடியாக இருந்தது. இதில் 52 சதவீதம் அண்மையில் முடிவடைந்த நிதியாண்டில் (நிதியாண்டு 2020-21) 79 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் பெறப்பட்டது. 

கடந்த பத்தாண்டுகளில் உலகளாவிய விற்பனை 14 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளதாக நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. நிறுவனம் கடந்த நிதியாண்டில் 1.25 மில்லியனுக்கும் அதிகமான பல்சர் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுமதி செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ கடந்த ஆண்டு சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டன, மேலும் அனைத்து ஸ்கூட்டர்களும் புனே மற்றும் பெங்களூரில் 36 மணி நேரத்திற்குள் விற்கப்பட்டதை அடுத்து முன்பதிவு 48 மணி நேரத்தில் நிறுத்தப்பட்டது. சேடக் ஸ்கூட்டரை மேலும் 24 நகரங்களுக்கு விரிவுபடுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதன் உற்பத்தி திறனை விரிவுபடுத்துவதற்காக, பஜாஜ் ஆட்டோ சமீபத்தில் மகாராஷ்டிராவின் சக்கன் பகுதியில் உள்ள நான்காவது ஆலையில் 650 கோடி ரூபாய் முதலீடு செய்வதாகவும் அறிவித்தது. 

Views: - 77

0

0

Leave a Reply