என்னய்யா இது பொசுக்குனு இவ்ளோ ஏத்திட்டாங்க! இனிமே இந்த பஜாஜ் ஸ்கூட்டர் வாங்குன மாதிரிதான்

19 April 2021, 5:30 pm
Bajaj Chetak electric receives massive price hike once again
Quick Share

பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை கடைசியாக கடந்த மாதம் தான்  உயர்த்தப்பட்டது. கடந்த முறை விலை உயர்த்தப்பட்டபோது அதன் அர்பேன் மற்றும் பிரீமியம் பதிப்புகளின் விலைகள் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.5,000 உயர்த்தப்பட்டது. அதுவே அதிகமான விலை உயர்வாக தான் பார்க்கப்பட்டது. ஆனால் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் மீண்டும் ஒரு முறை ஸ்கூட்டரின் விலையை அதிகரித்துள்ளது.

சேட்டக்கின் அர்பேன் மாடலின் விலை ரூ.27,620 அதிகரிக்கப்பட்டு இப்போது ரூ.1,42,620 விலையில் கிடைக்கிறது, இது முந்தைய விலையை விட மிக மிக அதிகமாக பார்க்கப்படுகிறது. 

அது ஒரு பக்கம் இருக்க, பிரீமியம் மாடலின் விலை ரூ.24,620 உயர்த்தப்பட்டு இப்போது விலை ரூ.1,44,620 (இரண்டு விலைகளும் எக்ஸ்ஷோரூம், புனே) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

பஜாஜ் இதுவரை புனே மற்றும் பெங்களூரில் மட்டுமே சேடக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது, ஆனால் தற்போது இந்த நகரங்களிலும் கூட முன்பதிவு மூடப்பட்டுள்ளது. 

நிறுவனம் சமீபத்தில் தான் முன்பதிவுகளை திறந்தது, ஆனால் 48 மணி நேரத்திற்குள் மொத்த ஸ்கூட்டரும் முன்பதிவு செய்யப்பட்டதை அடுத்து முன்பதிவுகளை நிறுத்திய கையோடு இப்போது ஸ்கூட்டரின் விலைகளையும் அதிகரித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சமீபத்திய தகவலின்படி, சேடக் விரைவில் ஹைதராபாத் மற்றும் சென்னையிலும் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பஜாஜ் சேடக்கின் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இது 3.8 kW மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது அகற்றப்படாத 3 kWh IP67 லித்தியம் அயன் பேட்டரி பேக்கிலிருந்து ஆற்றலைப் பெறுகிறது. இந்த பேட்டரி உடன் Eco பயன்முறையில் இயக்கப்பட்டால் இது 95 கி.மீ. வரை மைலேஜ் தரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இதன் வேகம் மணிக்கு 70 கி.மீ என்றும் கூறப்படுகிறது. சேடக்கின் சார்ஜிங் அமைப்பைப் பொறுத்தவரையில், இருக்கைக்கு அடியில் ஒரு உள்ளமைக்கப்பட்ட சார்ஜரைக் கொண்டுள்ளது, இதை எந்தவொரு 5-ampere பவர் சாக்கெட் உடன் இணைத்து  சார்ஜ்  செய்ய முடியும்.

பிரீமியம் மற்றும் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் ஏதர் 450X ஆகியவை பஜாஜ் சேடக்கின் முக்கிய போட்டியாளர்களாக பார்க்கப்படுகின்றன.

Views: - 105

0

0