பஜாஜ் பல்சர் பைக்கின் புதிய டாகர் எட்ஜ் பதிப்பு வெளியீடு | விலை & விவரங்கள் இதோ

27 April 2021, 5:52 pm
Bajaj Pulsar New Dagger Edge Edition launched
Quick Share

பஜாஜ் ஆட்டோ இந்திய நிறுவனம் இந்திய சந்தையை தன் கைக்குள் கொண்டிருக்க பல அசத்தலான திட்டங்களைக் கொண்டிருப்பதாக தெரிகிறது. 

முதலில் பஜாஜ் ஆட்டோ இந்திய நிறுவனம் புதிய பல்சர் NS 125 பைக்கை ஏப்ரல் 20 அன்று அறிமுகப்படுத்தியது. அதையடுத்து இப்போது நிறுவனம் பல்சர் 150, பல்சர் 180 மற்றும் பல்சர் 220F பைக்குகளுக்கான டாகர் எட்ஜ் பதிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த பதிப்பில் மேம்படுத்தல் என்றால் புதிய பெயிண்ட் திட்டம் மற்றும் கிராபிக்ஸ் மட்டும் தான். இந்த பைக்குகளில் எந்தவொரு இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை.

பஜாஜ் பல்சர் 150 டாகர் எட்ஜ் பதிப்பு பியர்ல் ஒயிட் மற்றும் சஃபயர் ப்ளூ ஆகிய இரண்டு மேட் வண்ண விருப்பங்களுடன் கிடைக்கிறது. 

பியர்ல் ஒயிட் நிறம் மட்கார்ட் மற்றும் விளிம்புகளில் சிவப்பு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இது அதன் உடல் கட்டமைப்பு முழுவதும் சிவப்பு-கருப்பு கிராபிக்ஸைப் பெறுகிறது. 

அடுத்து, சாஃபைர் ப்ளூ கலர் முன் மட்கார்ட் மற்றும் விளிம்புகளில் வெள்ளை சிறப்பம்சங்களுடன் வருகிறது, மேலும் இது அதன் உடல் கட்டமைப்பு முழுவதும் வெள்ளை-கருப்பு கிராபிக்ஸைப் பெறுகிறது. 

இருப்பினும், பைக்கில் எந்த இயந்திர மாற்றங்களும் செய்யப்படவில்லை. இது இன்னும் அதே 149.5 சிசி நான்கு ஸ்ட்ரோக் யூனிட்டைப் பயன்படுத்துகிறது, இது 8500 rpm இல் 13.8 bhp சக்தியையும் 6500 rpm இல் 13.5 Nm திருப்பு விசையையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

Bajaj Pulsar New Dagger Edge Edition launched

பல்சர் 180 மாடலில் சஃபைர் ப்ளூ இல்லை மற்றும் அதன் 150 சிசி மாடலில் கூடுதலாக எரிமலை சிவப்பு (வோல்கானிக் ரெட்) மற்றும் பிரகாசமான கருப்பு மேட் வண்ணங்கள் பயன்படுத்தப்படுகிறது. எரிமலை சிவப்பு நிறம் அதே வெள்ளை-கருப்பு கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களைப் பெறுகிறது. 

அதேசமயம், பிரகாசமான கருப்பு நிறம் சிவப்பு கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களை மட்டுமே பெறுகிறது. பைக்கை இயக்குவது அதே 178.6 சிசி மோட்டார் ஆகும், இது 8500 rpm இல் 16.8 bhp மற்றும் 6500 rpm இல் 14.52 Nm திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது.

Bajaj Pulsar New Dagger Edge Edition launched

பல்சர் 220F அதே நான்கு வண்ணங்களை, அதே கிராபிக்ஸ் மற்றும் சிறப்பம்சங்களுடன் பெறுகிறது. இது அதே 220 சிசி இன்ஜின் உடன் உள்ளது, இது 8500 rpm இல் மணிக்கு 20.1 bhp மற்றும் 7000 rpm இல் மணிக்கு 18.55 Nm திருப்புவிசையை உற்பத்திச் செய்கிறது.

டாகர் எட்ஜ் பதிப்பின் புது தில்லி எக்ஸ் ஷோரூம் விலைகள் பின்வருமாறு:

பல்சர் 150: ரூ .1,01,818

பல்சர் 150 ட்வின்-டிஸ்க்: ரூ .1,04,819

பல்சர் 180: ரூ .1,09,651

பல்சர் 220F: 1,28,250

Views: - 160

0

0

Leave a Reply