மிகப்பெரிய சாதனையோடு Battlegrounds Mobile India iOS பயனர்களுக்கும் வெளியானது | விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
18 August 2021, 12:46 pm
Battlegrounds Mobile India is now available for iOS users
Quick Share

PUBG மொபைல் கேமின் மறுபெயரிடப்பட்ட பதிப்பான Battlegrounds Mobile India முன்னதாக ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் அறிமுகமானதை அடுத்து இப்போது ஆப்பிளின் ஆப் ஸ்டோரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, எனவே iOS பயனர்கள் தங்கள் ஐபோன்களிலும் கேமை பதிவிறக்கம் செய்து விளையாடலாம். 

இந்த விளையாட்டு சமீபத்தில் ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரில் 50 மில்லியன் பதிவிறக்கங்களை தாண்டி சாதனை படைத்ததை அடுத்து நிறுவனம் இப்போது iOS பதிப்பையும் வெளியிட்டுள்ளது.

இந்த விளையாட்டு முதலில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான open-to-all முன்கூட்டிய அணுகல் பதிப்பாக கிடைத்தது. கேம் டெவலப்பர், பின்னர் விளையாட்டின் நிலையான பதிப்பை வெளியிட்டது. அப்போதிருந்து இந்த அதிக அளவில் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது, இப்போது கூகிள் பிளே ஸ்டோரில் 50 மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டியுள்ளது.

இதைத் தொடர்ந்து, க்ராஃப்டன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்கள் பயன்படுத்தக்கூடிய வெகுமதிகளைப் பற்றியும் அறிவித்துள்ளது. மைல்ஸ்டோன் முடிந்த பிறகு விளையாட்டை அணுகும் அனைத்து விளையாட்டாளர்களுக்கும் வெகுமதி கிடைக்கும் கிராஃப்டன் தெரிவித்துள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு வெகுமதிகள் காலாவதியாகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே iOS பயனர்கள் விளையாட்டை பதிவிறக்கம் செய்து காலாவதி ஆகும் முன் வெகுமதிகளைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Battlegrounds Mobile India கேம் பயனர்கள் நிரந்தர வெகுமதியாக கேலக்ஸி மெசஞ்சர் செட் அவுட்ஃபிட்டைப் பெறுவார்கள். ஆண்ட்ராய்டு மற்றும் iOS பிளேயர்கள் கிளாசிக் கூப்பன் க்ரேட் ஸ்கிராப்பின் மூன்று பீஸ்களை ரிவார்ட்ஸ் வடிவில் பெறலாம். வெகுமதிகள் in-game events பிரிவில் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

IOS பயனர்களுக்கு sign-up வெகுமதிகளையும் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் விளையாட்டு 1 மில்லியனைத் தொட்டவுடன், பிளேயர்களுக்கு இரண்டு சப்ளை க்ரேட் கூப்பன் கிடைக்கும். 5 மில்லியன் பதிவிறக்கங்களை அடைந்தவுடன், கிராஃப்டன் கிளாசிக் க்ரேட் கூப்பன் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் செட் 10 மில்லியன் பதிவிறக்கங்களை தாண்டியவுடன் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

Views: - 572

0

0