வெளியாகும் முன்னரே டவுன்லோடு செய்ய கிடைக்கும் Battlegrounds Mobile India | என்னென்ன போன்களில் கிடைக்கும்?

19 June 2021, 8:41 pm
Battlegrounds Mobile India launch
Quick Share

PUBG ரசிகர்கள் ஜூன் 17 வியாழக்கிழமை அன்று வெளியான Battlegrounds Mobile India விளையாட்டின் பீட்டா பதிப்பை டவுன்லோடு செய்து விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த கேம் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், PUBG மொபைல் கேமின் இந்திய ரசிகர்கள் ஏற்கனவே Android சாதனங்களுக்கான APK, OBB இணைப்புகளைப் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

சில மாற்றங்களுடன் PUBG கேம் Battlegrounds Mobile India என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த Battlegrounds Mobile India கேமைப் பொறுத்தவரை, கிட்டத்தட்ட எல்லா ஆண்ட்ராய்டு தொலைபேசிகளும் Battlegrounds Mobile India கேமை ஆதரிக்கும் என்று கிராப்டன் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் இதற்கு தொலைபேசியில் குறைந்தபட்சம் 2 ஜிபி RAM இருக்க வேண்டும். RAM தவிர, அதன் ஆதரவு சார்ந்துள்ள மற்றொரு காரணி Android பதிப்பைப் பற்றியது. தொலைபேசியில் 2 ஜிபி ரேம் உடன், தொலைபேசியின் ஆண்ட்ராய்டு OS 5.1.1 பதிப்புக்கு மேல் இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

இப்போதெல்லாம் பல மொபைல் போன்கள் குறைந்தபட்சம் 2 ஜிபி RAM உடன் வருகின்றன என்பதால் பயனர்கள் Battlegrounds Mobile India கேமை இயக்க முடியவில்லை என்று கவலைப்பட வேண்டாம். 

ரூ.20,000 பிரிவில் வரும் பெரும்பாலான இடைப்பட்ட ஸ்மார்ட்போன்களில் எல்லாமே Battlegrounds Mobile India கேமை நன்றாக விளையாட முடியும். நீங்கள் முழு கேமிங் அனுபவத்தையும் பெற விரும்பினால், அதை பிரீமியம் பிரிவு ஸ்மார்ட்போன்கள் அல்லது கேமிங் ஸ்மார்ட்போன்களில் இயக்கலாம்.

Battlegrounds Mobile India விளையாடுவதற்கான மற்றொரு தேவை நிலையான இணைய இணைப்பு. இந்த விளையாட்டை விளையாட குறைந்தபட்சம் 4-5 Mbps வேகம் தேவை. 

இதற்கிடையில், கிராப்டன் பீட்டா பதிப்பின் கூடுதல் பதிவுகளை எதிர்வரும் நாட்களில் வெளியிடத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. Battlegrounds Mobile India APK மற்றும் OBB பதிவிறக்க இணைப்புகள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த இணைப்புகள் சரிபார்க்கப்படாததால் அவற்றை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யும் போது சில பிரச்சினைகளும் ஏற்படக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 153

0

0