திடீரென ரூ.10000..! செம ஷாக் கொடுத்த BMW | BMW G310R | G310GS
Author: Hemalatha Ramkumar9 August 2021, 3:18 pm
BMW பைக் என்றாலே இளைஞர்களுக்கு ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். அதுவும் BMW பைக் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது. இந்த பைக் வாங்கலாம் என்று ஆர்வமாக இருந்தவர்களுக்கு BMW நிறுவனம் ஒரு ஷாக் கொடுத்துள்ளது. முன்பு ரூ.2.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக்கொண்டிருந்த BMW G310R பைக் மாடலும் மற்றும் ரூ.2.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலைக் கொண்டிருந்த BMW G310GS பைக் மாடலும் இப்போது ரூ.10,000 விலை உயர்ந்துள்ளன.
இதனை அடுத்து இப்போது BMW பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.2.60 லட்சமாக உள்ளது. மேலும், ADV மாடலான G310GS பைக்கின் விலை ரூ.3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் BMW நிறுவனம் இந்த பைக்குகளின் விலையை இரண்டாவது முறையாக அதிகரித்து ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.
தற்போது, இரண்டு பைக்குகளும் நிறுவனத்தின் நல்ல விற்பனையாகும் மாடலாக இருந்து வரும் நிலையில் இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உயர்ந்து வரும் உள்ளீட்டு செலவுகளை ஈடு செய்ய பல நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தி வரும் வேளையில் BMW இந்தியா நிறுவனமும் விலையை உயர்த்தி இருப்பது பெரும் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.
உண்மையில், G310GS மாடல் சாகச பைக் என்பதாலும் மற்றும் நவீன ஸ்டைலிங் கொண்டதாலும் அதிக வடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. எனவே ஜெர்மன் பிராண்ட் இறுதியில் தங்கள் வருவாயை அதிகரிக்கும் பொருட்டே விலைகளை உயர்த்தியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.
0
0