BMW கார்களின் விலைகள் ரூ.3.80 லட்சம் வரை திடீர் உயர்வு | புதிய விலை விவரங்கள் இங்கே

29 April 2021, 3:48 pm
BMW India hikes prices
Quick Share

BMW இந்தியா நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மாடல்களின் விலைகளைத் திருத்தியுள்ளது. 3 சீரிஸ், 2 சீரிஸ் கிரான் கூபே, X1, X3, X4, X5 மற்றும் X7 ஆகிய மாடல்கள் விலை உயர்வைப் பெற்றுள்ளன, மேலும் இந்த அனைத்து மாடல்களின் புதிய விலை விவரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம். புதிய விலைகள் 2021 ஏப்ரல் 8 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

நுழைவு நிலை செடான் மாடலான 2 சீரிஸ் கிரான் கூபே முதல் முறையாக விலை உயர்ந்துள்ளது. 220d ஸ்போர்ட்லைன் மற்றும் 220i M ஸ்போர்ட்ஸ் மாடல்கள் இப்போது முறையே ரூ.80,000 மற்றும் ரூ.60,000 விலை உயர்வுப் பெற்றுள்ளன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 220i ஸ்போர்ட் டிரிம் அதன் அறிமுக விலையிலேயே இருக்கிறது.

3 சீரிஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்கிறது. பெட்ரோல் வகைகள் ஆன 330i ஸ்போர்ட் மற்றும் 330i M ஸ்போர்ட் மாடல்கள் ஆகியவை முறையே ரூ.1,00,000 மற்றும் ரூ.60,000 விலை உயர்வைப் பெற்றுள்ளன. 320d சொகுசு பதிப்பின் விலை இப்போது ரூ.60,000 உயர்ந்துள்ளது.

எஸ்யூவிகளை பொறுத்தவரையில், சிறிய எஸ்யூவி ஆன X1, sDrive 20i ஸ்போர்ட்X மற்றும் sDrive 20i xLine ஆகியவை முறையே ரூ.1,30,000 மற்றும் ரூ.90,000 விலை உயர்ந்துள்ளன. இதையடுத்து, sDrive20d xLine மாடல் ரூ.1,10,000 விலை உயர்வு பெற்றுள்ளது.

இந்த வரிசையில் அடுத்ததாக இருக்கும் X3 மாடலின் விலை உயர்வைப் பொறுத்தவரையில் xDrive30i SportX ரூ.1,00,000 வரையிலும், xDrive 30i சொகுசு மாடல் ரூ .90,000 வரையிலும், மற்றும் xDrive 20d சொகுசு மாடல் ரூ. 1,20,000 வரையிலும் விலை உயர்வு பெற்றுள்ளது. 

அதேபோல், X4 க்கான விலை உயர்வைப் பொறுத்தவரையில் xDrive30i M Sport X மாடல் ரூ .80,000 வரையிலும் மற்றும் xDrive30d M Sport X மாடல் ரூ.1,00,000 வரையிலும் விலை உயர்வுப் பெற்றுள்ளது.

X5 எஸ்யூவியின் டீசல் மாடல்கள் இரண்டும் ரூ.1,00,000 விலை உயர்வைப் பெற்றுள்ளது, அதே சமயம் Xடிரைவ் 40i M ஸ்போர்ட் மாடலின் விலை ரூ.60,000 உயர்ந்துள்ளது. 

இதையடுத்து முதன்மை SUV ஆன X7 எக்ஸ்ஷோரூம் விலையில் அதிக விலை உயர்வைப் பெற்றுள்ளது. XDrive40i M ஸ்போர்ட் ரூ.2.5 லட்சம் விலை உயர்வு பெற்றுள்ளது, அதே நேரத்தில் DPE மற்றும் DPE சிக்னேச்சர் டீசல் வகைகள் முறையே ரூ.2.90 லட்சம் மற்றும் ரூ.3.80 லட்சம் விலை உயர்வைப் பெற்றுள்ளது.

Views: - 151

0

0

Leave a Reply