பாதிக்கப்பட்ட கொசுக்களுக்கு தன்னைத்தானே இரையாக்கிக்கொண்ட விஞ்ஞானி..! இந்த வீடியோவைப் பாருங்க!!!!
1 October 2020, 12:31 pmகொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல், ஜிகா வைரஸ், என்செபாலிடிஸ் மற்றும் ஜப்பானிய என்செபாலிடிஸ் போன்று இன்னும் பல நோய்கள் பரவுகின்றன. பல நாடுகளில் அரசாங்கங்கள் கொசுக்களை ஒழிக்க அனைத்து வகையான முயற்சிகளையும், அதை தடுப்பதற்கான தயாரிப்புகளையும் வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும், கொசுக்கள் தொடர்ந்து பல பகுதிகளில் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.
கொசுக்களின் அச்சுறுத்தலுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்காக பெரும் ஆபத்தான முயற்சிகளைக் கூட எடுக்கத் தயாராக இருக்கும் சில அர்ப்பணிப்புமிக்க மற்றும் தைரியமான விஞ்ஞானிகள் தங்களால் இயன்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விஞ்ஞானிகளில் பெர்ரான் ரோஸ் என்பவரும் ஒருவர். இவர் செய்த ஒரு ஆராய்ச்சி பற்றி தான் பார்க்க போகிறோம்.
ஒரே நேரத்தில் 4-5 கொசுக்கள் கடித்தாலே எரிச்சலும் வலியும் நம்மை பாடாய் படுத்திவிடும். ஆனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கொசு கடித்தால் எப்படி இருக்கும் என்று சற்று கற்பனைச் செய்து பாருங்கள்.
டெங்கு, ஜிகா மற்றும் பிற வைரஸ்கள் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பூச்சியியல் வல்லுநர் ஆன பெரான் ரோஸ், ஆயிரக்கணக்கான கொசுக்களுக்கு தன்னையே உணவாக அளித்துள்ளார். அவர் தனது ஆய்வகத்தில் மேற்கொண்ட ஆய்வை ஒரு GIF ஆக ட்வீட் செய்துள்ளார். அந்த டீவீட்டில் “கொசுக்களின் இனப்பெருக்கம் மற்றும் ஆய்வக தழுவல் பற்றிய எங்கள் ஆய்வு இப்போது முடிந்துவிட்டது!” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொசு முட்டைகள் மிகச் சிறியவை, அவற்றின் முட்டைச் சுவரை துளைக்க மைக்ரோமனிபுலேட்டர் தேவைப்படுகிறது. எனவே, அதிக முட்டையிடுவதற்கு பெண் கொசுக்களை உயிரோடு வைத்திருக்க, விஞ்ஞானிகள் அவற்றுக்கு தவறாமல் உணவளிக்க வேண்டியிருந்தது. அதைச் செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று அவர்களின் இரத்தத்தையே கொடுப்பதாகும். அதுபோன்று தங்கள் ஆய்வுகளுக்காக ரோஸ் தனது ட்வீட்டில் காட்டப்பட்டுள்ளபடி அவர் தன்னை தானே உணவாக கொடுத்துள்ளார். இதனால் அவர் கை முழுக்க தடித்துப் போயிருந்தது. அடுத்த நாள் அனைத்தும் சரியாகி விட்டது என்று இன்னொரு பதிவையும் பதிவிட்டுள்ளார்.