டேட்டா ரோல்ஓவர் வசதியுடன் புதிய பி.எஸ்.என்.எல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் | முழு விவரங்கள் இங்கே

2 December 2020, 10:17 am
BSNL Offering Data Rollover Facility With Three New Postpaid Plans
Quick Share

புதிய திட்டங்களை இந்தியாவிற்கு கொண்டு வர பி.எஸ்.என்.எல் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இப்போது, தொலைதொடர்பு ஆபரேட்டர் போஸ்ட்பெய்ட் பிரிவில் மூன்று புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ.199, ரூ.798, மற்றும் ரூ.999 ஆகும். அத்துடன் தொலைத்தொடர்பு நிறுவனம் ரூ.99, ரூ.225, ரூ.325, ரூ.799, மற்றும் ரூ.1,125 போஸ்ட்பெய்ட் திட்டங்களை நிறுத்தியுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ரிலையன்ஸ் ஜியோ போன்ற பிற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை வழங்க ஆபரேட்டர் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. ரூ.199 என்ற ஆரம்ப விலையில் இந்த திட்டங்கள் துவங்குகின்றன. புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களைத் தவிர, நிறுவனம் டேட்டா ரோல்ஓவர் வசதி, குடும்ப சேர்க்கை இணைப்பு ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே, இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி பார்க்கலாம்.

பி.எஸ்.என்.எல் ரூ.199 திட்டம்  

முதலில் ரூ.199 திட்டம் ஆன்-நெட் நெட்வொர்க்கில் அதாவது அதே பிராண்டில் வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. மற்ற நெட்வொர்க் வழங்குநர்களுக்கு டெல்லி மற்றும் மும்பை உட்பட 300 நிமிடங்கள் மட்டுமே வழங்குகிறது. தவிர, தொலைதொடர்பு ஆபரேட்டர் 25 ஜிபி மற்றும் 75 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியை வழங்குகிறது. தரவு முடிந்ததும், பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூ.10.24 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டம் 100 இலவச SMS வசதியையும் வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் ரூ.798 திட்டம்

பின்னர், ரூ.798 திட்டம், 150 ஜிபி டேட்டா ரோல்ஓவருடன் 50 ஜிபி தரவைப் வழங்குகிறது. இதேபோல், பயனர்கள் ஒவ்வொரு ஜிபி தரவிற்கும் ரூ.10.24 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பேக் டெல்லி மற்றும் மும்பையில் 100 செய்திகளையும் அனுப்புகிறது. இந்த பேக் குடும்பங்களுக்கு இரண்டு கூடுதல் இணைப்புகளையும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியையும் வழங்குகிறது.

பி.எஸ்.என்.எல் ரூ.999 திட்டம்

கடைசியாக, ரூ.999 திட்டம், 75 ஜிபி தரவு மற்றும் 225 ஜிபி ரோல்ஓவர் சேவைகளை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் மூன்று கூடுதல் இணைப்புகள், 75 ஜிபி தரவு, 100 செய்திகள் மற்றும் அனைத்து இணைப்புகளுக்கும் வரம்பற்ற அழைப்பு ஆகியவற்றைப் பெறுவார்கள். இந்த பேக் டெல்லி மற்றும் மும்பை வட்டங்களுக்கும் அழைப்பு வசதியை வழங்குகிறது.

Views: - 0

0

0