பிஎஸ்என்எல் வழங்கும் ரூ.1,999 மற்றும் ரூ.2,399 திட்டம் விலைகளில் திடீர் திருத்தம் | முழு விவரங்கள் இங்கே
Author: Hemalatha Ramkumar21 August 2021, 6:23 pm
பிஎஸ்என்எல் தற்போது 20 வட்டங்களில் ரூ.1,999 மற்றும் ரூ.2,399 திட்டங்களை திருத்தியுள்ளது. இந்த திருத்தம் இந்தியாவில் உள்ள அனைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.
திருத்தப்பட்ட ரூ.1,999 மற்றும் ரூ.2,399 ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
- ரூ.1,999 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் 90 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா வழங்குகிறது; இருப்பினும், தினசரி வரம்பு முடிந்தவுடன் வேகம் 80 Kbps வேகமாகக் குறைக்கப்படும்.
- இந்த திட்டம் எந்த தடையும் இல்லாமல் வரம்பற்ற அழைப்பு சேவையையும் வழங்குகிறது.
- இது ஒரு நாளைக்கு 100 செய்திகள் மற்றும் 365 நாட்களுக்கு லோக்தூன் உள்ளடக்கம் மற்றும் வரம்பற்ற பாடல் மாற்ற விருப்பத்துடன் இலவச PRBT ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான ஈரோஸ் நவ் பொழுதுபோக்கு சேவைகளுக்கான சந்தாக்களையும் வழங்கும்.
- ரூ.2,399 திட்டத்துடன் பயனர்கள் 425 நாட்களுக்கு அனைத்து நன்மைகளையும் பெறுவார்கள். இந்த திட்டம் வரம்பற்ற டேட்டா சேவையையும் வழங்கும்; இருப்பினும், 3 ஜிபி டேட்டாவுக்குப் பிறகு வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும்.
- தொலைத்தொடர்பு நிறுவனம் தினமும் 100 SMS களையும் இலவசமாக வழங்கும். இந்த திட்டத்தில் ஈரோஸ் நவ் உடன் பிஎஸ்என்எல் ட்யூன் சேவையும் இலவசமாக கிடைக்கும்.
அது தவிர, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ரூ.1,498 திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் 730 ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது. பிஎஸ்என்எல் தனது சேவைகளை வழங்கும் அனைத்து 20 வட்டங்களிலும் இந்த திட்டம் ஆகஸ்ட் 23, 2021 வரை கடிக்கும். இந்த திட்டம் வீட்டிலிருந்து வேலை செய்யும் அனைத்து பயனர்களுக்கும் மற்றும் ஆன்லைன் வகுப்புகலில் கல்வி கற்கும் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
0
0