ஓட்டுநர் உரிமம், RC எதுவும் தேவையில்லை..! ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை: போலீஸ் நிறுத்தினால் என்ன சொல்வது?

30 September 2020, 4:17 pm
Carrying physical copies of key documents are no longer mandatory
Quick Share

இனிமேல், Driving License எனும் ஓட்டுநர் உரிமம் அல்லது RC எனப்படும் வாகனத்தின் பதிவு சான்றிதழ் ஆகியவற்றை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், இனிமேல் போக்குவரத்து போலீசாரால் நிறுத்தப்பட்டால் நீங்கள் உங்கள் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை.

ஆனால், இதற்கு சரிபார்ப்பு செயல்முறையே இல்லை என்று அர்த்தமில்லை. அனைத்து நேரங்களிலும் இந்த ஆவணங்களை காரில் கொண்டு செல்வது சில சமயங்களில் ஆபத்தும் கூட. ஏனெனில் வாகனம் திருடப்பட்டால், அல்லது ஆவணங்கள் தொலைந்துவிட்டால் இந்த ஆவணங்களை அலைந்து திரிந்து பணம் கொடுத்து வாங்க வேண்டும். அதற்காக தான் அரசாங்கம் ஒரு புதிய நடைமுறையை அமலுக்குக்  கொண்டு வந்துள்ளது.

டிஜி-லாக்கர் மற்றும் எம்-பரிவஹன் போன்ற அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கள் ஒருவரின் தொலைபேசியில் முறையாக சான்றளிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ்களை வைத்திருப்பதற்கான ஒரு இருப்பிடமாக உள்ளன. மேலும் தேவைப்பட்டால் போக்குவரத்து சரிபார்ப்பு ஊழியர்களிடம் QR Code அல்லது டிஜிட்டல் சான்றிதழ்களை காண்பித்தால் போதும்.

ஒரு வாகனத்தில் செல்பவருக்கு மட்டும் இது எளிதான முறை அல்ல. சாலைகளில் ஆவணங்களை சரிபார்க்கும் ஊழியர்களுக்கும்  வேலைகளை குறைக்கிறது இந்த டிஜிட்டல் சரிபார்ப்பு முறை. ஏனெனில் அத்தகைய ஆவணங்கள் தொடர்பான அனைத்து தரவும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படும்.

லைசென்ஸ் செல்லுமா அல்லது காலாவதியானதா? என்பதையெல்லாம் சரிபார்க்க அதன் டிஜிட்டல் நகலை வெறுமனே வழங்குவது போதுமானதாக இருக்காது, ஏனெனில் போக்குவரத்து ஊழியர்கள் அவற்றை சரிபார்க்க தேவையான அனைத்து பதிவுகளையும் தேட வேண்டி இருக்கும். ஆனால், இந்த டிஜிட்டல் முறையில் ஆவண எண் அல்லது QR code போன்றவற்றை காண்பித்தால் ஆவணத்தின் மொத்த விவரமும் தெரிந்து விடும்.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இல் பல்வேறு திருத்தங்கள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்புகளில் இந்த தகவலும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் வழங்கப்படாவிட்டால் அல்லது அரசாங்கத்தால் கட்டளையிடப்பட்ட பயன்பாடுகள் மூலம் வழங்கப்படாவிட்டால் நேரடியாக ஆவணங்களை வழங்க வேண்டியிருக்கும் என்பதையும் கட்டாயம் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.