ஒரே நொடி போதும்…பட்டனை அழுத்தினால் நிறம் மாறும் கார்கள்: BMW நிறுவனத்தின் புது டெக்னாலஜி!!

Author: Aarthi Sivakumar
8 January 2022, 5:27 pm
Quick Share

ஆட்டோமொபைல் துறையில் இயங்கிவரும் உற்பத்தி நிறுவனங்கள் புதுமைகளுக்கு எப்போதுமே அதிக முக்கியத்துவம் கொடுப்பதுண்டு. அந்த வகையில் ஜெர்மன் நாட்டின் BMW நிறுவனம் அதில் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.

தற்போது CES கண்காட்சியில் ஒரு புதிய வகை தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த ஜெர்மன் நிறுவனம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் காரின் நிறத்தை மாற்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ல் ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் காரின் நிறத்தை மாற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக BMW சொல்லி இருந்தது.

BMW நிறுவனம் தற்போது இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. காரின் வண்ணத்தை மாற்றும் தொழில்நுட்பம் iX காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் மின்சார சக்தியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்.

E Ink மூலம் காரின் வண்ணம் மாற்றப்படுகிறது. இருப்பினும் இந்த நிறம் மாறும் கார்கள் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு எப்போது கிடைக்கும் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை. கருப்பு, வெள்ளையில் iX காரின் வண்ணம் மாறுகிறது.

Views: - 594

0

0